பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

31


ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் பல மொழி பேசுவோர் உண்டு - பல்வேறு நாகரிகமுடையோர் உண்டு. எனினும் வேற்றுமைகளைக் கடந்து - மறந்து விழுமிய ஒருமைப்பாடு கண்டு வாழும் ஒரு குடும்பமே நாம். இதற்கு மாறான உணர்வுகள் நாட்டிற்கும் நல்லதல்ல-நமக்கும் நல்லதல்ல.

உலகப் பெரும்போரின் போது சர்ச்சில், “வெற்றி! வெற்றி!” என்ற குரல் வழியே அந்நாட்டு மக்களை எழுச்சியும் புத்துணர்வும் பெறச் செய்து வெற்றி பெற்றார். இன்று நம்முடைய நாட்டிற்குத் தேவைப்படுகின்ற இன்றியமையா உணர்வும், ‘ஒன்றே குலம்’ - ‘வளர்க ஒருமைப்பாடு’ என்பனவுமேயாகும். வீட்டிலும், வீதியிலும் நாம் அன்றாட வாழ்க்கையில் கொண்டொழுகும் ‘ஒருமைப் பாட்டுணர்வே’ தேசீய ஒருமைப்பாட்டை வளர்க்க உதவும். ஊராட்சி மன்றங் களில் பொறுப்பேற்றிருக்கும் நண்பர்கள் தங்களுடைய கிராமச் சமுதாயத்தை அன்பியல் தழுவிய-உறவோடு கலந்த ஒரு குடும்பமாக ஆக்குவதில் முயற்சித்து வெற்றி பெறுதல் வேண்டும்.

தேசீய ஒருமைப்பாட்டின் அடித்தளம் கிராமச் சமுதாய அமைப்பிலேயே இருக்கிறது.

இந்தியா என்றால் கிராமம்; இந்திய நாட்டின் இதயம் கிராமங்கள். இந்திய நாட்டின் எண்பது விழுக்காடு மக்கள் கிராமங்களிலேயே வாழ்கின்றார்கள். அவர்களிற் பெரும் பாலோர் வேளாண்குடி மக்கள். அவர்களால் உண்பிக்கப் பெறுவோர் பலர். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னிருந்த நிலைதான். இதை எண்ணிப் பார்க்கவும் நெஞ்சம் குமுறுகிறது. உழைப்பவர் வாழ்க்கையில் சோர்வு; உழைக்காத வர்கள் நகரங்களில் “வெளிச்சம் போட்டு” வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சாதி ரீதியான ஆதிக்கம்-சமுதாயத்தை அட்டைபோல் உறிஞ்சி அலைகழிக்கச் செய்யும் நிலப் பிரபுத்துவ முறை ஆகியவைகளால் வலிவும் வனப்பும்