பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

463



தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் –குறள் 56

என்ற திருக்குறளில் “தற்கொண்டாற் பேணி” என்ற தொடருக்குப் பரிமேலழகர் “கணவனை உண்டி, முதலியவற்றால் பேணல்” என்று கூறினார். நல்ல உணவு, உடல் நலத்திற்குத் தேவை. நல்ல உடல் நலம் குடும்ப வாழ்க்கைக்குத் தேவை. ஆதலால், சமவிகிதச் சத்துணவு குடும்பத்தில் எல்லோருக்கும் கிடைக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அரிசிச் சோற்றைக் குறை! காய், கனி வகைகளை அதிகப்படுத்து! அளவுக்கு அதிகமாக வேக வைத்து உணவுப் பொருள்களின் சத்தை வீணாக்கிவிடக்கூடாது; அளவோடு வேக வைக்க வேண்டும், காரட் முதலியவற்றை வேக வைக்கக்கூடாது. பச்சையாகவே உண்ண வேண்டும். நெய்யை உருக்கியும் மோரைப் பெருக்கியும் பயன்படுத்த வேண்டும். உடலுக்குத் தேவையான உணவுகளை முதலில் பரிமாற வேண்டும். சுவையானவற்றை கடைசியில் பரிமாற வேண்டும். அன்றாட உணவில் பருப்பு, தானியவகைகள் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோலவே, முருங்கைக் கீரை, முருங்கைக்காய், கருணைக்கிழங்கு முதலியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தூதுவளைக்கீரை எல்லா வகையிலும் உயர்ந்தது; சுண்டைவற்றல் எத்தனை ஆண்டானாலும் வறுத்தாலும் சத்துக் கெடாது வாரத்திற்கு ஒரு நாளாவது சுண்டைவற்றல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நல்ல உணவு வழங்கும் அன்னபூரணியாக, அட்சய பாத்திரமாக வளர்க!

கூடுமான வரையில் குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாகக் கூடி உட்கார்ந்து உரையாடிக்கொண்டு உண்பது நல்ல பழக்கம். நம்மில் சிலர் உண்ணும் பொழுது பேசக் கூடாது என்பர். இது தவறு. “உண்ணும்பொழுது