பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளமும் இழந்து போன கிராம வாழ்க்கைக்குப் புத்துயிரூட்டியது. நாம் பெற்ற சுதந்திரம். வேளாண்குடி மக்கள் உழைப்பில் நியாயமான பங்குபெற அது வழி செய்தது. ஏன்? அண்ணல் காந்தியடிகள் சொன்னது போல, உழவர்களுக்கு உழும் நிலத்தில் உரிமை கிடைக்கும் வண்ணம் நிலச் சீர்த் திருத்தத்தைக் கொணர்ந்தது. இத்தகு புதிய சாதனைகள் விவசாயிகளிடத்தில் எழுச்சியைத் தந்திருக்கின்றன-தன்னம்பிக்கையைத் தந்திருக்கின்றன- உற்பத்தியைப் பெருக்கியிருக்கின்றன.

நமக்கு தெய்வசாநித்யம் தெரியுமோ தெரியாதோ ஆனால், எண்ணற்ற தெய்வங்களைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், எப்படி வாழ்வது என்று மட்டும் கற்கமாட்டோம். நமது பாட்டன் பூட்டன்கள் ஏடெடுத்தடுக்கிப் பூசித்தனர். ஏடு கிடைக்காதவன் ஆயுத பூஜையின் பெயரால் மண் வெட்டியும் கலப்பையும் வைத்துக் கும்பிட்டான். எத்தனை பூசை போட்டும் அந்தக் கலைமகள் தேவியின் கருணா கடாட்சம் இந்த நாட்டில் இல்லை. அறிவிலே தெளிவதில்லை. ஆற்றலிலே உறுதியில்லை. வெந்ததைத் தின்றார்கள்; விதிவந்தபோது செத்தார்கள். “மரணமிலாப் பெருவாழ்வு” என்று சித்தர் சொன்னது ஏட்டில் இருந்தது. படித்த பண்டிதர்கள் பதவுரையும் பொழிப்புரையும் சொன்னார்கள். எனினும் பாரில் அந்த வாழ்க்கை- “மரணமிலாப் பெரு வாழ்வு” இல்லை. சுதந்திரம் வந்தது. தேடித் திரிந்தாலும் கிடைக்காத கல்வி சமுதாயத்தையே தேடிவந்தது. கவிஞன் பாரதி,

“வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி”

என்று முழங்கினான். இன்று "தமிழகமெங்கும் கல்வி" என்பதே பேச்சு. "ஒரு பள்ளியைத் திறப்பவன் ஒன்பது சிறைச் சாலையை மூடுகிறான்" என்பது பழமொழி. மேலும், "கல்வி