பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

469


என்றார். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்குவதுடன் பண்பாட்டுடன் பழக்கி வளர்க்க வேண்டும். எந்த அவைக்குச் சென்றாலும் முதலில் இருக்கும் நிலைக்குரிய தகுதியுடன் குழந்தையை வளர்க்க வேண்டும். நல்ல தாய், நல்ல தந்தை என்ற பெயரைப் பல்கலைக் கழகம் தர இயலாது. நம்முடைய குழந்தைகளின் வாழ்வியலை மைய மாகக் கொண்டு, அளவுகோலாகக் கொண்டு நாடு வழங்கு வதாகும்! ஆதலால், செல்வி: உங்களுக்குப் பிறக்கும் குழந்தையை நன்றாக வளர்த்துப் புகழுக்குரியவராக்குக! குழந்தை பிறந்தவுடன் எழுது, வாழ்த்துக்களும் விளையாட்டுப் பொறிகளும் அனுப்பி வைக்கின்றோம். உங்கள் குடி விளங்க வரும் மக்களுக்கு வரவேற்பு! வாழ்த்துக்கள்.

மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே

"
–திருஞானசம்பந்தர்
61. [1]குழந்தைகள்

குழந்தைகள் வளர்க்கப் பெறுதல் வேண்டும். நாளைய நாடு இன்றைய குழந்தைகள் கையில்தான் இருக்கப் போகிறது. மனிதர்கள் வருவார்கள் – போவார்கள்! ஆனால், நாடு என்றும் இருக்கும். ஆதலால் நாட்டின் நிலையான தன்மையை நினைவிற்கொண்டு எதிர்வரும் தலைமுறையைச் சீராக வளர்க்க வேண்டும். நமது நாட்டின் நேற்றைய தலைமுறை அதாவது நமக்கு முந்திய தலைமுறை நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைமுறை.


  1. வாழ்க்கை நலம்

கு.XIII.31.