பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 
4
 
பல்துறைக் கட்டுரைகள்

63. மூலமும் முதலும் உள்ளமே

வாழ்க்கை, பார்வைக்கு எளிதாகக் காட்சியளிக்கிறது. அப்படித்தான் பலர் கருதி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையான வாழ்க்கை அருமையானது; ஆனாலும் எளிமையானது; சிக்கல்கள் நிறைந்தது; ஆனாலும் தீர்வு காணவல்லது. எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பது கேள்வியல்ல. எப்படி வாழ்ந்தோம் என்பதே கேள்வி. அதனாலன்றோ மாணிக்கவாசகரும் “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்று இடித்துரைக்கின்றார். வாழும் வகையில் வாழாத வாழ்க்கை பயனற்றது. ஆதலால், அது வாழ்வன்று. அப்பரடிகளும் “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!” என்பார். வாழும் வகையே வளத்திற்கு அடிப்படை. வரலாற்றுக்கு ஊற்றுக் கண். அதனாலன்றோ, வள்ளுவம், “வாழ்வாங்கு வாழ்க!” என்று ஆணையிட்டது. .

சுவைத்து உண்கின்றோம். ஆனாலும் சுவைத்து வாழ்வதில்லை. மற்றவர்களிடமிருந்து ஆயிரம் ஆயிரம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் மற்றவர்கள் நம்மிடமும் எதிர்