பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

482

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேறோர் ஆன்மாவும் நம்புமேல் அப்பொழுது நம்பிக்கை அளவு கடந்த ஆற்றல் பெறும்” என்றார் நொவாலிஸ். அதாவது வாழ்க்கையின் தொடக்கம் நட்பே. அதற்குப் பிறகுதான் காதல். இரண்டுபேர் ஒருவரை ஒருவர் நம்பிய நட்பில் விளைவது வியக்கத்தக்க ஆற்றல். அவர்கள் அரிய பல சாதனைகளைச் செய்வர். நிலையான காரியங்கள் பல நடக்கும். இத்தகைய நட்பு நினைந்து நினைந்து ஈட்டப்படக்கூடிய ஒன்றாகும். இந்த நம்பிக்கை நிறைந்த நட்பு வாழ்க்கையில் ஒரே குறிக்கோள் உயர்ந்து விளங்கும், இவர்கள் வாழ்க்கையில் உயர்வு, தாழ்வு இல்லை. தேவைகள் இருக்கும். ஆசைகள் இரா. தேவைகளை அடையும் அல்லது எடுத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் இருக்கும். காலப்போக்கில் ஒரே ஆன்மாவோ என்று எண்ணி அதிசயிக்கத்தக்க நிலையை அடைவர்.

அடுத்து, காதல் வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் நம்பிக்கையே அனைத்தும். மனைவாழ்க்கையில் நம்பிக்கையே நல்ல இராகம். எந்த வீட்டில் நம்பிக்கையுடைய இருவர் காதலராக வாழ்கின்றனரோ அந்த வீட்டில் அழகு பொலியும்; வளம் கொழிக்கும்; அமைதி நிலவும்; மகிழ்ச்சி ததும்பும். நல்ல தலைமுறையும் தோன்றும். மனைவாழ்க்கையில் நிறைய நலம் சார்ந்த ஒப்படைப்பு முறை பயனுடையது. நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையில் ஈருடல் இன்பம் துய்க்கும் சாதனமே தவிர, உண்மையில் ஈருடல் அல்ல என்ற எண்ணம் தோன்ற வேண்டும். உடலும் உயிர் இன்றியமையாதது. உயிருக்கு உடல் இன்றியமையாதது. அதுபோல மனைவாழ்க்கைக்கு நம்பிக்கை இன்றியமையாதது. இது நாள்தோறும் அறிவறிந்த நிலையில் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று.

நாம் வாழ்வது, இந்த உலகத்தில்! இந்த உலகம் என்பது மக்களின் தொகுதி, இந்த மக்களுடன் நாம் வாழ்ந்து, வளர்ந்து மடிய வேண்டியது என்பது நியதி. மக்கள் தொகுதி கடல்