பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

483


போன்றது. கடலில் இங்கும் அங்கும் எங்கேயாவது அழுக்கு இருக்கும். அதனால், கடலே – கடலில் உள்ள தண்ணிர் முழுவதுமே – அழுக்கு என்ற முடிவுக்கு வரக்கூடாது. மனித சமுத்திரத்தை நம்ப வேண்டும். மனித சமூகத்தை நம்பிக்கையுடன் பழக வேண்டும். ஒரோவழி ஏற்படக்கூடிய ஏமாற்றங்களுக்குரிய காரண காரியங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏரிகளின் ஒட்டையை அடைக்க வேண்டுமே தவிர, ஏரியைத் தூர்த்து விடக் கூடாது. மானுடம் வெற்றி பெறுவதற்குரிய ஆற்றல் நம்பிக்கையிலேயே இருக்கிறது.

கடவுள் பற்றிய சிந்தனை நம்பிக்கையிலேயே தொடங்க வேண்டும். காணாதனவற்றைக்காண, இருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் முயற்சி தோன்றும். இல்லாதனவற்றைப் பெறுதற்குரிய முயற்சிகளனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையிலேயேயாம். நம்பிக்கை கொள்க. வெற்றிகள் பெற்று உயர்ந்திடுக.

31–12–88
66. [1] உணர்ச்சியும் அறிவும்

இன்றைய மாணவர்களிடத்தே அறிவுப் பசியும், ஆய்வு வேட்கையும் மிகுந்து வளர்கின்றன. அப்பசிக்கு ஈடு செய்யும் வண்ணம் நல்ல தரமான இலக்கியங்கள் வளரவில்லை. இந்நிலை மாணவ சமுதாயத்தைத் திசைமாற்றிக் கெடுத்துவிடும்.

சந்தைக்குச் சென்று கீரைக்கட்டு வாங்கும்போது, பூச்சிக் கீரைகளை ஒதுக்கி, நல்ல கீரைதானா என்று பார்த்து வாங்குகிறோம். ஆனால், தரமான இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதில் கீரைக்கட்டு வாங்குவதில் காட்டும் அளவு அக்கறைகூடக் காட்டுவதில்லை. புத்தகங்கள் வாங்கும்போது, நல்ல – அழகான – கவர்ச்சிகரமான


  1. * பொங்கல் பரிசு