பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

487


பயன்? என்றெல்லாம் ஆராய்வது இன்றைய தலைமுறைக்கு வழிகாட்ட உதவும். ஆத்திகம் – நாத்திகம் ஆகிய இரண்டு கொள்கைகளுக்கும் கடவுளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆத்திகர் என்றால் “கடவுள் நம்பிக்கை உடையவர்” என்று பொருள் கொள்ளக்கூடாது. அப்படிப் பொருள் கொள்ளக்கூடிய ஒரு பொய்ம்மையை ஆத்திகர்கள் என்று தம்மை இனங்காட்டிக் கொள்பவர்கள் தோற்றுவித்துவிட்டனர். உண்மை அதுவன்று. ஆத்திகம் என்பது கடவுள் நம்பிக்கையுடைய கொள்கையாக இருந்தால் கடவுள் நம்பிக்கையுடைய இசுலாமிய சமயத்தை எதிர்ப்பது ஏன்? மசூதியை இடிப்பது ஏன்? கிறித்தவ சமயத்தை எதிர்ப்பது ஏன்? கிறித்தவர்களை வெறுப்பது ஏன்? கிறித்தவ சர்ச்சுகளை இடிப்பது ஏன்? கடவுள் ஒருவர் தானே! அவர் தானே எல்லாருக்கும் கடவுள்! “ஒன்று பரம்பொருள்” என்ற கொள்கை பொய்யா? கடவுளர் பலரா? தேவர்கள் எல்லாரும் கடவுளரா? ‘பூசுரர்’ என்ற பூதேவர்களும் கடவுள்களா? இல்லை, இல்லை! இன்று ஆத்திகர்கள் என்பவர்களுக்குக் கடவுளிடத்தில் நம்பிக்கை இருக்கிறதா என்பது ஆய்வுக்குரிய செய்தி. ஆனால், ஒன்று உண்மை. சாத்திரங்கள் சடங்குகளில் நம்பிக்கை இருக்கிறது. சாத்திரங்கள் கற்பித்த வருணாசிரமத்தில் நம்பிக்கை இருக்கிறது; வினைகளில் நம்பிக்கை இருக்கிறது. பணக்காரன் – ஏழை ஏற்பாடு கடவுள் ஏற்பாடு. பூர்வ ஜன்ம புண்ணிய பலாபலன் என்ற கொள்கையில் நம்பிக்கை இருக்கிறது. இவைகளைக் காப்பாற்றி மனித வர்க்கத்தில் தீண்டாமையையும் சாதிகளையும் நிலையாகக் காப்பாற்றிச் சுரண்டுகிற சமுதாயத்திற்குப் பாதுகாவலாக அமைந்து தம்மை உயர் சாதியினராக, புரோகித சாதியினராக உயர்த்திக் கொள்வதில் ஆத்திகர்களுக்கு அக்கறை.

நாத்திகர்கள் இதற்கு நேர் எதிரிடையானவர்கள்! தலைவர் பெரியார் “நான் கடவுளை நம்பவில்லை! ஏன்?