பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

506

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



71. [1]கொலுவும் வாழ்க்கையும்!

பாரத தேசத்தில் சமய சமூக நிகழ்ச்சிகளில் அன்னை பராசக்திக்கு முதன்மையான இடமுண்டு. இயல்பாகவே பாரத நாட்டுச் சமயம், எல்லாவற்றையும் அன்னை பராசக்தியின் வடிவமாகப் பாவித்து வாழ்த்தி வணங்குதல் மரபு. நாட்டை வளப்படுத்துகிற ஆறுகள், வாழ்க்கையை வளப்படுத்துகிற கலைகள், எல்லாமே அன்னையின் வடிவம். பெண்மையை இழிவுபடுத்திக் கோழைமைத்தனத்திற்கு ஆளாக்கியது மிகவும் பிற்காலத்தியக் கொள்கையேயாகும். அன்னை பராசக்தி கலைமகளாகத் திகழ்ந்து கலைகள் பலவற்றைக் கற்றுத் தருகிறாள்; திருமகளாகத் திகழ்ந்து தேடும் செல்வங்களனைத்தும் தருகிறாள்; கொற்றவையாகக் குலவிக் கொடுமையையும் தீமையையும் அழித்து நன்மை சேர்க்கிறாள். இந்த நம்பிக்கை இந்த நாட்டினுடைய மக்கள் வாழ்க்கையில் ஜாதி இன மொழி வேறுபாடுகளைக் கடந்து பரவியுள்ளது.

பாரதம் முழுவதும் கொண்டாடப் பெறுகிற ஒரு சிறந்த திருவிழா இந்த நவராத்திரி விழா. இந்த நாட்டில் நடைபெறும் பல திருவிழாக்கள் கோவில்களில் மட்டுமே கொண்டாடப் பெறுவதுண்டு. ஆனால் நவராத்திரி விழா கோவில்களில் மாத்திரமின்றிக் குடும்பங்களிலும் கொண்டாடப்பெறுவது நாம் நினைவில் கொள்ளத்தக்க சிறப்பான நிகழ்ச்சி. குடும்பங்கள் செழித்தாலே கோவில் செழிக்கும். குடும்ப வாழ்வில் அன்பியலும் அருளியலும் செழிக்குமானால் கோவில்களும் செழிக்கத்தானே செய்யும்! நவராத்திரி விழாவில் நாடு முழுவதுமே மகிழ்கின்றது! நம் குழந்தைகள் எல்லாம் ஆடி விளையாடுகின்றன! கலைஞர்கள் கலைத் திறன் காட்டுகின்றனர்! அணங்குகள்


  1. பொங்கல் பரிசு