பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

511


கற்க, உணர, அனுபவிக்கவும், அனுபவித்ததைச் சிந்தனை செய்யவும், செயல்வடிவம் கொடுக்கவும் கற்க வேண்டும். இந்த நிலையில்தான் அறிவு வருகிறது; வாழ்க்கைக்கு உதவி செய்கிறது. ஆதலால், அகவிருளாகிய அறியாமையை அகற்றி அறிவொளியை அகத்தில் ஏற்றுவதும் தீபாவளியின் போது நிகழ வேண்டிய ஒன்று.

நரகாசுரன் என்பவன் துவாபரயுகத்தில் வாழ்ந்தான்! அவன் மக்களுக்கும் தேவர்களுக்கும் துன்பம் கொடுத்து வந்தான். திருமால் அவதாரம் செய்து நரகாசுரனை வதம் செய்து மக்களையும் தேவர்களையும் பாதுகாத்த புராண வரலாற்றை நினைவூட்டுவது தீபாவளி! நரகாசுரன் இறக்கும் தருணத்தில் தன் நினைவாக மக்கள் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்கத் தீபாவளி கொண்டாடப் பெற்று வருகிறது.

தீபாவளி, அசுரத் தன்மை மறைந்த நாள்; துன்பம் நீங்கிய நாள்; மகிழ்ச்சிக்குரிய நாள், அசுரத்தன்மை தொலைந்தது என்ற உணர்வில் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுகின்றோம்; மகிழ்ச்சியைக் கொண்டாட வெடிகள் வெடிக்கப்படுகின்றன; புத்தாடை உடுத்து மகிழ்கின்றோம். பல்வேறு சுவையுடைய பண்டங்கள் செய்து உண்பித்தும் உண்டும் மகிழ்கின்றோம்.

தீபாவளி ஆண்டு தோறும் வழக்கமாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தீபாவளியின் தத்துவங்கள், கொள்கை – கோட்பாடுகள் எந்த அளவுக்கு வெற்றிபெற்றுள்ளன என்று கூறமுடியாது. இந்த நாட்டின் கடைகோடி மக்களான ஏழைகள் தீபாவளி கொண்டாட முடியாது. நடுத்தர வர்க்கத்தினரும் கூடக் கடன்வாங்கித் தான் கொண்டாடுகின்றனர். நன்மையும் பூரணமாக வளர்ந்து விடவில்லை. நம்மைச் சுற்றி, பகை இன்னும் அகலவில்லை.

இந்த மங்கல நாளாகிய தீபாவளியன்று நாம் நல்லனவே எண்ணவும், நல்லனவே செய்யவும் உறுதி