பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

520

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களுக்கு மாட்டுப் பொங்கலன்று சோறூட்டுவர். மற்ற நாள்களில் எல்லாம் வைக்கோல்தான்! “உழுத நோன் பகடு அழி தின்றாங்கு” என்பது புநானூறு – மாட்டு பொங்கலன்று மாடுகளுக்கு குதூகலம்! விளையாட்டு! மாடு அவிழ்த்து விடுதல், மஞ்சுவிரட்டு முதலியன நிகழும்.

நான்காம் நாள், காணும் பொங்கல் நாள் என்பர். இளைஞர்களும் யுவதிகளும் விளையாடி மகிழும் திருநாள். இளைஞர்கள் சடுகுடு விளையாட்டில் ஆர்வம் காட்டுவர்; ஏறு தழுவலில் ஈடுபடுவர். இந்த விளையாட்டுக்களை யுவதிகள் பார்த்துப் பூரிப்பர். மனத்தைப் பறிகொடுப்பர். காதல் கனியும்; வழியும் பிறக்கும். "தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது வழக்கு. யுவதிகள் கும்மி, கோலாட்டம் ஆடுவர். இதைக் கண்டு மகிழ இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு. மாலை நேரத்தில் அனைவரும் மற்ற வீடுகளுக்குச் சென்று "பால் பொங்கியதா?" என்று விசாரித்து வாழ்த்துக் கூறுவர். பெரியோர்களை வணங்கி வாழ்த்துப் பெறுவர். இது தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் மரபு. மாலை நேரத்தில் சிறுவர் – சிறுமியர் ஆரத்தியுடன் இல்லங்கள் தோறும் சென்று கும்மியடிப்பர். காசுகள் பெறுவர்; பொதுவாக மகிழ்ச்சி நிறைந்த நன்னாள்.

தமிழர் திருநாள் – பொங்கல் திருநாள் தமிழினத்திற்கோர் திருநாள். காசுகள் கரியாகாமல் வீடுகள் சீரமைக்கப் பெறும் திருநாள். உணவும் உடையும் மனிதனின் அடிப்படைத் தேவைகள்! இவ்விரண்டையும் வழங்கும் விவசாயத்திற்கு ஒரு விழா செந்நெல், செங்கரும்பு, மஞ்சட் கொத்துக்கள் முதலிய வேளாண்மைப் பொருள்கள் பயன்படுத்தப் பெறும் விழா அறுவடை விழா என்றே கொண்டாடப் பெறும் விழா! மனுதனின் செல்வமாகிய மாடுகளை வளர்ப்பதற்கு ஊக்கமளிக்கும் ஒரு விழா; மாட்டுப் பொங்கல், கிராம மக்களுக்கிடையில் ஒற்றுமை