பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

530

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மாமழை பொழிய மாநிலம் செழிக்க
மார்கழி மறுநாள் தைமுதல் திருநாள்
அகமும் புறமும் அழகே நிறைக!
அன்பும் அறமும் பண்பும் பொங்குக!

செயலின் திறமும் செல்வமும் பெருக
செம்மை வாழ்வில் குறளும் பொங்குக!
பொங்கும் மாட்சி போற்றிட பொலிக!
பொங்குக எங்கும் பொங்கலோ பொங்கல்!

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”

                                           கோவை AIR ஒலிபரப்பு 14:180

80. [1]பொங்கல் செய்தி!

இனிய அன்பர்களே! பொங்கல் வாழ்த்துகள்! இனிய அன்பர்களே! வாழ்க்கைப் போக்கில் நாளும் கிழமையும் வருவது வாழ்க்கையில் பயனை விளைவிப்பதற்கேயாம்! பொங்கல் விழா, தமிழ்நாட்டின் தணிவிழா! நமது உழைப்பின் பயனை அறுவடை செய்து பயன்காணும் விழா! தமிழ் நாட்டுக்குப் புத்தாண்டின் தொடக்கமே தைத்திங்கள்தான்! “தைபிறந்தால் வழி பிறக்கும்” என்பது பழமொழி! தைத் திங்களைத் தொடர்ந்துதான் வீடுகளில் திருமணங்கள்! திருக் கோயில்களில் திருவிழாக்கள்! மக்கள் மன்றங்களில் தமிழ் விழாக்கள்! பொங்கல் விழா. வாழ்க்கையோடிணைந்த விழா!

பொங்கல் விழாவுக்கு வீடுகள் பழுது பார்க்கப் பெறுகின்றன! சுண்ண வண்ணம் பூசப் பெறுகின்றன! சுற்றுப் புறங்கள் தூய்மை செய்யப்பெறுகின்றன! உடல் வாழ்வின் நலத்திற்குத் தேவை நல்ல சுற்றுச் சூழ்நிலை! நல்ல வீடு! இது விழவின் தொடக்கம்! நல்ல வீடு நல்ல மனிதர்களை


  1. சிந்தனை மலர்கள்