பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

533


கால்நடைகளே நமது செல்வம்! நமக்கென வாழும் இயல்பின! அந்தக் கால்நடைகளைப் பேண வேண்டும்! அவற்றை வளர்த்துப் பாதுகாக்க வேண்டும்! வீட்டிற்கு ஒரு பசு! கிராமப்புறங்களில் இந்த இயக்கம் தேவை! புரதச்சத்துள்ள பாலுணவு கிராமப்புறச் சிறுவர்களுக்கு இயற்கை யான தேவை! நம்மைக் காப்பாற்றும் கால்நடைகள் வளர்க! வாழ்க!

அடுத்து, அறிவினை வளர்க்கும். உணர்வினை வளர்க்கும் தமிழுக்குப் பண்பாடுங்கள்! துறைதோறும் தமிழ் வளர வேண்டும்! நம் குழந்தைகள் தமிழிலேயே அனைத்தையும் கற்க வேண்டும்! அறிஞர்களாக வேண்டும்! பொங்கல் நாளில் தமிழே கல்வி மொழி என்று உறுதி கொள்க! தமிழ்ப் பொங்கலிடுக!

தமிழினம், “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று வாழ்ந்த இனம்! “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்பது வாழ்வியல் சமுதாயக் கொள்கை! இடையில் வந்த சாதிக் குப்பைகளை மறப்போம்! ஒருகுடியென ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் கூடி உலகியல் நடத்த உறுதி கொள்வோம்! கெட்ட போரிடும் போக்கிற்கு ஒரு முடிவு கட்டுவோம்! எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையை நோக்கி, நமது சமூக அமைப்பை இயக்குவோம்! உழைப்பே வேள்வி பகுத்துண்ணலே அறம்! இதுவே, இந்தப் பொங்கல் செய்தியின் கோட்பாடு: பொங்கலோ பொங்கல்! இன்ப நலன்கள் மல்குக! வாழிய, வாழியவே!

14.1.90
81. [1]பொங்கற் பரிசு

தமிழகத்தின் தணிவிழா – தமிழினத்தின் நாகரிகப் பெருவிழா – உழைப்பின் திருநாள் – உழைப்பாளர் உலகம்


  1. பொங்கல் பரிசு

கு.xiii.35.