பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

41


நிலையில் நாட்டு மக்களுக்கு இன்னின்ன கொள்கைகள் நலம் தருவன என்று கருதி அவற்றை வாக்காளர்கள் முன்னே வைத்து வாக்குகள் மூலம் தீர்ப்பை எதிர்பார்க்கின்றன. அக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகின்ற அல்லது இயல்புடையனவல்ல என்று ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்குகின்ற உரிமை வாக்காளர்களுக்கே உண்டு. அப்படியிருக்க மக்களின் நலனுக்கான கருத்தை வைப்பவர்களிடையே காழ்ப்போ பகையோ வர வாய்ப்பு ஏது? அதுபோலவே கருத்தை ஏற்றுத் தீர்ப்பளிக்கின்ற உரிமை மக்களுக்கு இருக்கும்போது தன்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களிடமோ அல்லது மாற்றுக் கருத்துடையவர்களிடமோ வெறுப்பும் பகையும் காட்டுவது ஜனநாயக முறைக்கே முரண்பட்ட ஒன்று என்பதை வாக்காளர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றோம். ஆதலால், தேர்தலைக் கருத்து வளர்ச்சிப் பிரச்சார இயக்கமாகவும் அதன்வழிச் செயற்படும் இயக்கமாகவும் நடத்தாமல், மனிதர்களுக்குள் பகைமையை- வளர்க்கும் இயக்கமாகப் பயன்படுத்துகிறவர்களிடத்தில் வாக்காளர்கள் விழிப்போடு இருக்கவேண்டும். அவர்கள், பகைமையை வளர்க்கும் முறையில் ஈடுபட்டாலும் அல்லது வாக்காளர்களை ஈடுபடுத்த முயன்றாலும் அவர்களை ஒதுக்கித் தள்ளுவது வாக்காளர்களின் உரிமை வழிப்பட்ட கடமையாகும்.

ஒரு சிறப்பான எதிர்காலத்தை அமைக்க விரும்புகிறவர்களுக்குக் கடந்த கால வரலாற்றறிவு இன்றியமையாத ஒன்று, தமிழ்ச் சமுதாயம் இவ்வுலகின் பல்வேறு சமுதாயங்கள் நாகரிகம் பெறுவதற்கு முன்னரேயே உயர்ந்த நாகரிகத்தில் வாழ்ந்த சமுதாயமாகும். இந்த நூற்றாண்டில் “ஓருலகம்” பேசப்பெறுகிறது. ஆனால், இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே புறநானூற்றுக் காலக் கவிஞன்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறி ஒருலக ஒருமைப்பாட்டை வலியுறுத்தியிருக்கின்றான். இக் கவிதை