பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

563



தமிழ் மறை: இன்றைய சமுதாயத்தில் அறிந்தோ அறியாமலோ வேதம் என்ற சொல்லாட்சிக்கு மதிப்புக் கிடைத்திருக்கிறது. சைவத் தமிழ் உலகத்திலும்கூட வேதங்களுக்கே முதல் இடம் வழங்குகிறார்கள் வேதம் வடசொல்! மறை தமிழ்ச்சொல் தமிழர்களுக்கு உரிய மறை, இன்று வழக்கத்தின் காரணமாக நம்மீது திணிக்கப்படுகின்ற ஆரிய மொழி மறைகள் அல்ல என்பதை நல்லோர் போற்றும் நச்சினார்க்கினியர். சிவஞானப்போதப் பேரூரை கண்ட மாதவச் சிவஞான முனிவர், தனித் தமிழ் மலை என விளங்கிய மறைமலை அடிகள் ஆகியோர் எடுத்துக் கூறியும், நம்மனோரில் பலரிடம் கருத்துத்தெளிவு ஏற்படவில்லை. இது குறித்துச் சைவத் தமிழ் இனம் வாழ்க்கைக்குக் கைக்கொள்ள வேண்டிய மறைகள் - எவை என இத்திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கப் புலவர் பெருமக்கள் வழி காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். இன்று தமிழ் இனம் செய்த நல்வாய்ப்பின் காரணமாகத் தமிழர்களிடத்தில் ஒரு நூல் தமிழர் மறை என்று வேறுபாடின்றிப் பாராட்டப் பெறுகிறது. அதுதான் திருக்குறள் ஒரு முழுதுறழ் அந்நூல் மறை என்பது வேற்றுமை களை குறைக்க வேண்டும். திருக்குறளுக்கு மனிதர்களுக் குள்ளாக நெருங்கிய பாசம் கலந்த உறவை உருவாக்க வேண்டும். திருக்குறளுக்கு இந்த இயல்பு உண்டு. குணம் குறிகளைக் கடந்த பரசிவம்போல சாதி, இனம், மொழி, நாடு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்த ஒப்பற்ற நாகரிகத்தை விளக்கும் திருநூலாகத் திருக்குறள் திகழ்கிறது.

திருக்குறள், தமிழர் தம் வாழ்க்கை மறையாகவும் இந்திய நாட்டின் தேசிய நூலாகவும், விளங்குங் காலம் அண்மையில் இருக்கிறது.

தமிழும் சமயமும்: சமயம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி அன்று. ஒரு சில சடங்குகள் மட்டும் சமயம் அல்ல. ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒட்டு மொத்தமான சமுதாய அமைப்பிலும் சமயம் ஒரு முழு நிலை