பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

570

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோன்றுகிறது. இனிய நல்ல சூழலில் தோன்றும் இத்தமிழ்ச் சங்கம் இனிது வளர்ந்து எண்ணிய பணிகளைச் செய்து முடிக்கும் என்று நம்புகின்றோம்.

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒரு நல்ல திருத்தலம். தேவாரம் பாடிய மூவரும் வந்து வாழ்த்தி வணங்கிய திருத்தலம். திருஞானசம்பந்தரும் அப்பரும் பாடிய பதிகங்கள் இத்திருத்தலத்திற்கு உண்டு. இந்த ஊரில் பதினான் நிற்கும் மேற்பட்ட திருமடங்கள் அமைந்து சிவநெறிக்கும் செந்தமிழுக்கும் தொண்டுசெய்த செய்தியைத் திருக்கோயில் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. தமிழ்ப் புலவர்களுக்கு மழையென விளங்கிய வள்ளல் பாரி ஆட்சி செய்த பறம்பு நாட்டு எல்லையில் இருப்பது திருப்புத்தூர். இந்த வட்டத்தில் சங்ககாலத் தமிழ்ச்சான்றோர்கள் வாழ்ந்த ஊர்கள் பலப்பல உண்டு. எனவே திருப்புத்தூர். வழியாகவே தமிழ்ச் சூழலில் சிறந்தது என்று குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். அதனால் அன்றோ அப்பரடிகள் இந்த ஊர் இறைவனைப் பாடும் போது "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினோன் காண்” என்று நினைந்து பாடுகின்றார். இன்னும் நமக்கு நினைவூட்டுகிறார். ஆதலால் திருப்புத்தூரில் தமிழ்ச் சங்கம் திருத்தளிநாதர் கோவிலில் அமைவது சாலவும் பொருத்தம் என்றே நம்புகின்றோம். திருப்புத்துார்த் தமிழ்ச் சங்கம் குன்றக்கடி திருவண்ணாமலை ஆதீனத்தின் திருப்புத்துர்த் திருத்தளிநாதர் ஆலயத்தின் துணை அமைப்பாகத் தொடர்ந்து விளங்கும். துணை அமைப்பு என்று குறிப்பிடுவது நிதி - நிர்வாகத்தைப் பொறுத்ததே ஆம் கருத்துக்களில் திருப்புத்துார் தமிழ்ச் சங்கப் புலவர் அவைக்குப் பாண்டியர், புலவர் அவைக்கு வழங்கிய உரிமையும் ஆலவாயண்ணல் தமிழ் அவைக்கு வழங்கிய உரிமையும் உண்டு என்பதைக் குறிப்பிட விரும்புகின்றோம்.

முன்னுள்ள பணிகள்: திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கத்தின் முன்னே உள்ள பணிகள் பலப்பல. அவை மலையெனக்