பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முதன்மைப் பதிப்பாசிரியர்  தவத்திரு பொன்னம்பல அடிகளார்
செயலர்  பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்
பதிப்பாசிரியர் குழு  தமிழாகரர் தெ. முருகசாமி
 நா. சுப்பிரமணியன்
 குன்றக்குடி பெரியபெருமாள்
 க. கதிரேசன்
 மரு. பரமகுரு

என அக்குழு அமைக்கப்பெற்றது. இக்குழு கூடி அடிகள்பிரான் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் தொகுத்து,

திருக்குறள்

இலக்கியம்

சமய இலக்கியம்

சமயம்

பொது

என்று ஐந்து பெரும் பிரிவுகளாக வெளியிடலாம் என முடிவு செய்தது. திருக்குறள் பற்றிய முதலிரண்டு தொகுதிகள் டிசம்பர் 1999 இல் வெளிவந்தன,

பின் இப்பணியில் ஒரு தேக்கம். அடிகள்பிரான் எழுதிய புத்தகங்களில் சில கிடைக்கவில்லை. எல்லாப் புத்தகங்களையும் முழுதாகச் சேகரித்துக் கொண்டால்தான் பொருள் வாரியாகத் திருத்தமுறத் தொகுக்க இயலும் என்று பதிப்பாசிரியர் குழு கருதியது. கைவசம் இல்லாத புத்தகங்களைத் தேடியது. இது பெருமளவு காலதாமதத்தை ஏற்படுத்தியது. டாக்டர் ச. மெய்யப்பன் அவர்கள் தூண்டுதல் வேகமாக இருந்தமையால் சில புத்தகங்கள் கிடைக்காத நிலையிலும் தொகுப்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. பதின்மூன்றாம் தொகுதி தொகுத்து அச்சுக்கு அனுப்பிய நிலையில் பலவகையால் தேடியும் கிடைக்காத 'சொல்லமுதம்', 'சமய மறுமலர்ச்சி' எனும் இரண்டு புத்தகங்களும் டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களின் முயற்சியால் கிடைத்தன. இதனை இப்பதிப்புப் பணியை அங்கீகரித்த திருவருள் குறிப்பாகவே நினைக்கின்றோம். இவையிரண்டு புத்தகங்களிலும் இருந்து கட்டுரைகள் பல, முன் தொகுதிகளில் இடம் பெறத்தக்கவையாக இருந்தன. அவற்றில் சேர்க்க இயலாத நிலையில் புதிய தலைப்புகள் தந்து உரியவாறு