பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ன உறவு? ஒரு உறவும் இல்லை. புண்ணியத்தின் விளைவு நல் நெஞ்சமும், நல்உணர்வுமாகும். பாபத்தின் விளைவு தீய நெஞ்சமும், தீய உணர்வுமாகும் என்பதே உண்மை. இறைவனும்-இறைமைத் தன்மையும்-அவனது அருட் கொடைகளும் பொதுவானவை-நீலவானும் நீலக்கடலும் போலப் பொதுமையானவை. ஈசனது இணையடி நிழலின் அனுபவத்தைக் கூறும் அப்பரடிகள், உலகமக்கள் அனை வரும் விரும்பி அனுபவிக்கும் பொருள்களையே வரிசைப் படுத்திக் கூறுவது நினைக்கத்தக்கது:

“மாசில் வீணையும் மாலை மதியமும்
விசு தென்றலும் வீங்கிள வேனிலும்
முசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”

பண்பட்ட சமயத் தத்துவத்திற்கும் சிலர் வாழும் கொள்கைக்கும் சிறிதும் உறவில்லை. ஆனாலும், நன்னலத்தின் விளைவு வழிவழிச் சமுதாயத்தை வாழ்வாங்கு வாழ்வித்துக் கொண்டு வந்த உயர்ந்த-தூய சமயத்தத்துவங்களைக் களங்கப்படுத்தவும், சமுதாய விரோதமாகச் சுயநலத்திற்குப் பயன்படுத்தவும் தயங்கவில்லை. இப்படி உபயோகப்படுத்தியதன் காரணமாகவே அருள் நெறிக்கு முற்றிலும் மாறுபட்ட “பொருள் முதல்வாத” தத்துவங்களும் “எண்ண முதல்வாத” தத்துவங்களும் தோன்றின என்பதை மறுப்பதற்கில்லை. இத்தவறான-பொய்யான கருத்தின் தொடர்பு இன்றும் சிலரிடம் இருந்து வரத்தான் செய்கிறது. ஆனாலும் வளர்ந்து வரும் சமுதாயத்தின் முன்னிலையில் சக்தியற்று மூலையில் ஒதுங்கிக்கிடந்தது. மூலையில் முடக்கப்பெற்ற தத்துவத்தை மீண்டும் தர்மத்தின் பேரால் உயிர்ப்பிக்க முயற்சிக்கின்றார்கள். இவர்களிடத்தில் நாம் மிகமிக விழிப்பாக இருக்கவேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கின்ற ஆதரவு நம்மைப் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் தள்ளி