பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இயந்திர அறிவு எள்ளளவும் இல்லாதிருந்த நாட்டிற்குப் பல்வேறு இயந்திரங்களையும் உற்பத்தி செய்து அவற்றை உலகச் சந்தைகளுக்கு அனுப்பும் இயந்திரப் புரட்சியைக் கண்ட சக்தி எது?

மின்சாரத்தால் ஊரெல்லாம் ஒளிபரப்பி ஒண்புகழ் கொண்ட சக்தி எது?

வழிவழியாகக் கலைமகளைத் தெய்வமெனக் கொண்டாடியும் எழுதப்படிக்கத் தெரியாதவரே மிகுந்திருந்த இந்நாட்டில், "கல்விக்குக் காசு வேண்டும்-சாதி வேண்டும்" என்றிருந்த நிலையை மாற்றி, எல்லார்க்கும் கல்வி-சோறொடு துணி கொடுத்துக் கல்வி வழங்கிய சக்தி எது?

ஈசன் இவ்வுலகத்திற்குத் தாயும் தந்தையும் என்பர். இறைவனின் படைப்பே இவ்வுலகம் என்பர்; எண்ணிலடங்கா வேத சாத்திரங்களை எடுத்து ஒப்பிப்பர். ஆனால், மனிதருக்குள் சாதியை ஒழித்தாரில்லை. நமது மக்களில் ஒரு பகுதியினர் தீண்டத்தகாதவர்களாக இருந்த நிலைமையை மாற்றி, எல்லோரும் ஓர்குலமாக வாழும் உரிமையை வழங்கிய சக்தி எது?

“உழுவோர் உலகத்திற்கு ஆணி”, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்”, “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே?”, என்றெல்லாம் பேசினார்களே தவிர உழவர்களுக்கு நிலம் தந்தாரில்லை.

உலர்ந்து போனவர் வாழ்க்கையில் வளம் ஏற்பட நியாய வாரம், நிலச்சீர்திருத்தம் ஆகியவற்றின் மூலமாக வாழ்க்கையில் நம்பிக்கையும் நல்வளமும் நல்கிய சக்தி எது?

“செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்,” என்ற பாரதி வாக்குக்கேற்ப, நம் கண் முன்னேயே ஒரு மொழி இன்னொரு மொழியை அடக்கி ஆளவிடாமல், மொழிவழி மாநிலம் கண்டு மொழி வழி தேசியத்தை வளர்த்து எந்த ஓர் இனமும் தன்