பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

53


கருதித் திட்டங்கள் தீட்டும் போக்குடையது-தீட்டிய திட்டங்களை நிறைவேற்றும் ஆற்றலுடையது.

மேலும் வாழ்க்கையில் நம்பிக்கையைத் தந்து ஒளிமிக்க எதிர்காலத்தை நமக்குக் காட்டுவது-தலைமை தாங்கி நடத்திச் செல்லும் சக்தி அது.

இக்கருத்து கணிசமான கணக்கின் வழி ஏற்புடையது என்பதே நமது எண்ணம். ஆதலால் உயர்ந்த ஆக்க ரீதியான தலைமைக்கும், சக்திக்கும் வாக்காளர்கள் துணை நிற்க வேண்டும். அங்ங்ணம் நிற்பீர்கள் என்றே நாம் நம்புகின்றோம். முதல் சக்தி ஏற்புடையதாக ஆகிறது; மூன்றாவது சக்தி மக்களை விட்டு ஒதுக்கப்பட்டு விடுகிறது.

எஞ்சி நிற்பது இரண்டாவது சக்தி. இது, முதல்சக்தி சொல்லும் சோஷலிசப்பாதையில் செயல்முறையில் துணை நிற்கவும், ஆக்க ரீதியில் விவாதிக்கவும், விமரிசிக்கவும் செய்து முழுமையான ஜனநாயக ரீதியில் ஆற்றப்படுத்தி நட்பு வழியாக நானிலத்தை வளப்படுத்தத் துணை செய்யவும், இச்சக்தியைப் பயன்படுத்த முடியும். அச்சத்தியும் நாம் கருதும் வழி இயங்கும் என்று நாம் நம்புகின்றோம். இந்த அடிப்படையில் இரண்டாவது சக்தியை நாம் ஒதுக்கித் தள்ளாமல், ஆனால் அப்படியே நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைமையில் இல்லாததால் முதல் சக்தியின் ஆக்கப் போக்கில் துணையாக நிற்க அவர்களுக்கும் தேவையான அளவிற்குப் பலம் கொடுக்க வகை செய்யலாம் என்பதும் நமது கருத்து. அப்படிச் செய்வது நாட்டின் வளர்ச்சிக்குப் பேருதவியாகவும் இருக்கும்.

நாம் மேற்சொன்ன கருத்துக்களை நினைவிற்கொண்டு வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும். ஒருகுல சமுதாயத்தை-சமவாய்ப்புச் சமுதாயத்தை-திட்டமிட்ட முன்னேற்றத்தை உருவாக்கும் தகுதியும் வாய்ப்பும் எந்தக் கட்சிக்கு இருக்கிறது என்று தேர்ந்து தெளிந்து அந்தக் கட்சிக்கே தங்கள் மேலான

கு.XIII.5.