பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

55


களிடத்தில் சமுதாய பொது நல உணர்வு குன்றி விடுகிறது. இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு வாக்கு வேட்டையாடுபவர்கள், தவறுகள் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய பலவீனங்களிலிருந்து வாக்காளர் ஒவ்வொருவரும் தம்மை விடுவித்துக் கொள்வதோடு, முற்போக்கான அப்பழுக்கற்ற சோஷலிஸ சமுதாய அமைப்புக்கேற்றவாறு தங்களுடைய அகவாழ்க்கையையும் புற வாழ்க்கையையும் செழுமைப்படுத்தத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், வாக்கை கேட்பவர் எவரானாலும் வாக்கை உபயோகப்படுத்துவது நாம் விரும்பும் ஒரு சமுதாய ஆக்கத்திற்காகவேதான். எனவே, சிறந்த ஜனநாயகத்தின் முழுமை, வாக்காளர்களின் செழுமையைப் பொறுத்ததேயாம். இல்லையானால். பெர்னாட்ஷா சொன்னதற்கு இலக்கியமாகி விடும்.

“வாக்காளர்கள் முட்டாள்களாக இருந்தால், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்றுச் சட்டசபைக்குச் செல்லுகிறவர்கள் அயோக்கியர்களாகத்தான் இருப்பார்கள்” என்பது பெர்னாட்ஷாவின் வாக்கு. இங்ஙனம் இருக்க யார் தாம் விரும்புவார்கள்?


7. [1]இரட்டை உருளைகள்

சுதந்திர பாரத சமுதாயம் இனி வருங்காலத்தில், மக்களாட்சி முறையில், எல்லாரும்-எல்லாச் செல்வங்களும், பெற்று வாழும் சமநிலை சம வாய்ப்புச் சமுதாயமாக-பூரண ஜனநாயக சோஷலிச அமைப்புடையதாக இருக்கவேண்டும் என்பது நம்முடைய திட்டம். இந்த ஜனநாயக சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதில் ஆட்சிக்கு இருக்கும் பொறுப்பைவிட இந்த நாட்டுக் குடிமக்களுக்கு இருக்கும்


  1. மண்ணும் விண்ணும்