பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

67


வழிக்கு மாறுபாடுகளை, முரண்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தச் சூழ்நிலைகளிலெல்லாம் மனிதர்களை மறந்துவிடவேண்டும். எது சரி? எது தவறு? எது மக்களுக்கு மிகுதியும் பயன் தரும் என்பதே எண்ணமாக அமைய வேண்டும். இந்த எண்ணப்போக்கு மிகுதியும் வளர்ந்து பயன் தரவேண்டுமானால் “நான்” “எனது” என்ற செருக்குணர்வு அழியவேண்டும். பெருமை என்பது மற்றவர்கள் தருவதேயன்றி தாமாக எடுத்துக் கொள்ளக்கூடியதன்று.

அடுத்து, அறிவார்ந்த நிலையில் கூட்டுறவு உணர்வு செயல்படுத்தப்படவேண்டும். ஒருவருக்கு ஒருவர் சிந்தனை செயலில் ஒத்துப்போதலில் தொடர்ச்சி இருக்கவேண்டும். ஒத்துப்போதலில் தொடர்ச்சி இருக்கவேண்டும். ஒத்துப் போதல் என்பது அருமைப்பாடுடைய நுண்ணிய வாழ்வியல் எதிலும் தொடர்ச்சி. நீங்காமல் நிலவவேண்டும். முழுமையாக, வளர்ச்சியடையும் வரையில் தொடர்ச்சி தேவை, வளர்ந்த நிலையில் தொடர்ச்சி ஒழுக்கமாகவும் பழக்கமாகவும் அமைந்துவிடும். பலருடைய வாழ்க்கையில் உறவுகளில் செயல்முறைகளில் தொடர்ச்சி இன்மையாலேயே வெற்றி கிடைக்கவில்லை. சோறு சமைக்கும்பொழுது இடையிடை விட்டுச் செய்தால் அது சோறாக இருக்காது. ஏன் நம்முடைய உயிர்ப்பு நிலையை இடையீடு இல்லாத தொடர்ச்சியாக மூச்சுத்தானே பாதுகாத்து வருகிறது. ஒரு விநாடிகூட மூச்சு தானாக நிற்காது நின்றால் கதை முடிந்தது. அதுபோல நமது பணிகளும் உறவுகளும் அமைய வேண்டும். அதனால்தான் திருக்குறளும்“ உணர்ச்சி நட்பாங் கிழமை தரும்” என்றது.

அடுத்து கூட்டுறவின் தலையாய நோக்கம் மற்றவர்களுக்கும் பயன்படுதல் என்பதேயாகும். மற்றவர்க்குப் பயன்படும் வழியில் நமக்குப் பயன்படலாம் என்பதே கூட்டுறவின் தத்துவம் கூட்டுறவின் இந்த அடிப்படையைச் சிந்தனை செய்ய வேண்டும். இந்தச் சிந்தனை நமது கூட்டுறவாளர்களிடையே இருக்கிறதா? என்பதே ஐயப்பாடு இன்று கடன்