பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும் என்ற ஆர்வமே மேலிட்டது. இந்த முறை பிழையான முறை.

நம் ஒவ்வொருவரிடமும் இன்னமும் நாடு தழுவிய நிலையில் உலகந் தழீஇய நிலையில் மொழி, இனம், சாதி, மதம் என்ற எல்லைகளைக் கடந்த மனிதகுல உணர்வு-மனித நேயம் உருக்கொள்ளவில்லை. சமுதாய உணர்வு பெறுதல் வேண்டும். திருக்குறள் மனிதகுலத்தைச் சார்ந்து ஒழுகு தலையே ஒழுக்கம் என்று கூறுகிறது.

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”

-குறள் 140

என்பது குறள். நாகரிகம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? வாழ்கின்ற மாடமாளிகையும் கூடகோபுரங்களுமா நாகரிகத்தின் சின்னங்கள்! அல்லது விண்ணளந்து நிற்கும் கோபுரங்களா? இல்லை, இல்லை! நாகரிகத்தில் உயர்ந்து விளங்கிய மனித குலத்தின் படைப்புகளாக இவை விளங்குகின்றன. இன்று நாகரிகம் என்பது நம்முடைய உடம்பின் தோலைக்கூடத் தொட்டுப் பார்க்கவில்லையே!

“நாகரிகம் என்றால் நல்ல நடத்தை” என்று பொருள். “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” என்று கலித் தொகை கூறும். அதாவது மக்கள் தொகுதியுடன் ஒத்தறிந்து ஒழுகுதலாகும். இங்ஙனம் ஒத்தறிந்து ஒழுகும் பொழுதுதான் சமுதாயம் உருவாகும்; உருவாயும் வருகிறது. எவ்வளவுதான் தனி மனிதன் சிறந்தவன் ஆனாலும்-அவனுடைய சிறப்புக்கே சமுதாய அமைப்புதான் காரணம். இரண்டு பேருடைய அறிவார்ந்த விவாதத்தில் பிறக்கும் அறிவுக்கும் சக்திக்கும் நிறைய ஆற்றல் உண்டு!

நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழக் கூடிய ஒரு சமுதாய அண்மப்பு தோன்றி வளர்ந்து வருகிறது என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். இன்று இந்திய சமூகத்தில் புரந்த நிலையில் மக்களாட்சி முறையும் கூட்டுறவு