பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

79


உறவு! பொருளாதார அடிப்படையில் மட்டும் தோன்றி வளரும் உறவல்ல, கூட்டுறவில் வளரும் உறவு! இஃது ஆன்ம நிலையில் வாழ்க்கையின் விவரிக்கப்பட முடியாதபகுதி என்ற சிந்தனையில் மலர்ந்து வளரும் உறவு! இத்தகைய கூட்டு உறவு மக்களிடத்தில் வளர்ந்தாலே பாரத சமுதாயம் தோன்றும்! இத்தகு கூட்டுறவு நிலையில் மக்களை நெறிப்படுத்தி வளர்க்க அரசு துணைசெய்ய வேண்டும். அதேபோழ்து அரசின் அதிகார அமைப்பாகக் கூட்டுறவு அமைந்துவிடக்கூடாது என்பதில் அரசு விழிப்பாக இருக்கவேண்டும்.

நமது பாரத சமுதாயமும் சரி, உலக சமுதாயமும் சரி எதிர்வரும் காலத்தில் சிறப்புற வளர, வாழ மனித இதயங்களைப் பரிவர்த்தனை செய்துகொண்டு, “ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்” என்று வாழும்பொழுதுதான் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறும்!

(காரைக்குடி, மத்திய மின்வேதியியல் ஆய்வகம் -
அறிவியல் ஆய்வுக் கருத்தரங்கம் 1991, ஆகஸ்ட் 15:16.)


12. [1]திருப்பணி

ந்தப் பூவுலகம் மனிதர்கள் கூடிவாழ்ந்து இன்ப நலம் பெறுவதற்கேயாம். உலகியல் அமைப்பில் எப்பார்வை கொண்டு பார்ப்பினும், மனித இனத்திற்கு நலம் தருகின்ற காட்சியையே பார்க்கின்றோம். ஆனாலும் மனித சமுதாயத்தின் வாழ்க்கைப் போக்கில் இன்ப நலன்களைவிடத் துன்ப நலன்களே மிகுந்து காணப்பெறுகின்றன. இதற்குக் காரணம் என்ன? உலகியல் என்றோ, ஊழியல் என்றோ சொல்லித் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. மனித சமுதாயத்தை அச்சத்திலிருந்தும் துக்கத்திலிருந்தும் காப்பாற்றியே


  1. பொங்கல் பரிசு