பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

81


சமுதாயத்திற்கு உடனடியான தேவை, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்கின்ற விஞ்ஞான அறிவு. விஞ்ஞான அறிவு வாழ்க்கையின் புறச்சூழலை வளர்த்துச் செழுமைப் படுத்த வேண்டும்; அதே காலத்தில் நம்முடைய பாரம் பரியமான அருளுணர்வு சமுதாயத்தின் உள் உணர்ச்சியைத் தூண்டி வளர்த்துச் செழுமைப்படுத்த வேண்டும்.

பாரத நாட்டுச் சிந்தனையாளர்களும், சமய நெறியாளர்களும் இத்திருப்பணியில் ஈடுபடவேண்டும்.


13. [1]நமது கடமை

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்று கருதிப் போற்றுவது நமது மரபு. பாரதம், அன்பின் தாயகம்; அருளின் பெட்டகம்! கருணைக் கதிரவன் சுற்றுலாப் போதரும் திருநாடு! சமாதானத்தின் பண்ணை; எல்லாரையும்- எவரையும் ஏற்றிப் போற்றும் இனிய பண்பிற் சிறந்தநாடு. இத்தகு தாய்த் திருநாட்டின் எல்லையில் சீன அரசாங்கம் ஆக்கிரமிப்புச் செய்து, நமக்குத் தொல்லைகளைத் தந்து வருகிறது.

இமயம் நமது இலட்சியம்.

"மன்னும் இமயமலை எங்கள் மலையே"

என்று பூரிப்புடன் நாம் பாடிப் பரவும் பெரும் மலை. மண்ணகத்தில் பாய்ந்து விண்ணகத்தின் வளமெல்லாம் தரும் பேராறுகள் ஊற்றெடுத்துப் பாய்ந்து வரும் உயர்மலை. ஆறுகள் மட்டுமா? தம்மையடக்கித் தம்முடைய தலைவனை யுணர்ந்து உலகுயிர் அனைத்தும் இன்ப நலன் எய்தி மகிழ வேண்டும் என்ற நோன்பிற் சிறந்த மனிதருள் தேவர் வாழ்ந்த - வாழ்ந்து கொண்டிருக்கிற பனிமலை அமைதியின்


  1. பொங்கல் பரிசு