பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

89



7. திருச்சி வானொலி பொங்கல்
கவியரங்கம்


திருச்சிராப்பள்ளி

அகில இந்திய வானொலி பொங்கல் கவியரங்கம்
“நல்லகாலம் வருகுது!”
14–1–1987



இன்பப் பொங்கல் இனியநாள் இன்று
அகில இந்திய வானொலி நிலையத்தார்
“நல்ல காலம் வருகுது!” என்று
எண்ணிக் கவிதையால் இயம்ப வைத்தனர்!
வாழிய நிலையத்தார்! வானொலி நேயர்கள்
வாழிய! மக்கள் அனைவரும் வாழ்கவே!
“நல்ல காலம் வருகுது” என்பான்
தெருவிலே வருகிற குடுகுடுப் பாண்டி!
“நல்ல காலம் வருகுது” என்பர்
சாதகம் கணிக்கும் சோதிடர்! ஆயினும்
நாம் அறிந்ததை நவில்கிறோம் இங்கே!
நல்ல காலம் தானாக வந்திடும்
என்பதை மட்டும் நம்பிட வேண்டாம்!
நல்லது - கெட்டது
காலத்தில் ஏது? காலத் தினையே
நல்லதாக் குவதும் கெட்டதாக் குவதும்
ஐயா! நீர்தான் என்பதை அறவீர்!
நல்ல காலத்தை நாம் படைத்திட
இன்றே உறுதி கொள்வோம்! பொங்கற்
பானை குயவர் வனைந்து படைத்தது!
செந்நெல் அரிசியும் செங்கரும்புச் சாறும்
உழவர் உழைப்பின் விளைவு! இவையெலாம்

கு.XIV.7