பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உழைப்பின் விளைவாய், இருக்கும் பொழுது
காலத்தை நன்றாக்கல் கற்பனையிற் சாலுமோ?
உலக இயற்கையின் உயிர்ப்பு உழைப்பே!
மண்முதல் விண்வளர மண்டிக் கிடந்திடும்
பூத பெளதிக உலகம் யாவையும்
ஒயா துழைத்து உயிர்ப்பொடு வாழும்!
இம்மண் ணுலகை எழிலுறக் காத்திடும்
ஓரறிவு உயிர்முதல் ஐயறிவு உயிர்வரை
இயற்கை நெறியில் இம்மியும் தப்பாது
உழைப்பி னாலே தழைத்துவாழ் கின்றன!
எல்லா உலகமும் ஆனவ னாக
இலங்கும்எம் இறைவனும் கூடஅப் படியே!
இறைவ னுக்குப் பூசனை யென்றால்
எதற்குப் பூசனை? இறைவனுக் காஅது?
இல்லை, இல்லை! ஏற்றமார் மானுடம்
உழைப்பினால் உயர்ந்து விளங்கிடும் உண்மையைக்
காட்டிட வேதான் கடவுட்குப் பூசனை!
இறைவன்பால் இரத்தலுக்கு ஏற்பட்ட தன்று!
மானிடச் சாதியின் மாண்பமை படைப்பின்
ஆற்றலைக் காட்டும் செயல்அது வாகும்!
இறைவன் திருவுளம் பொய்த்திட வில்லை!
என்பதன் புனிதச் சான்றே பூசனை!
ஆதலின்,
நம்பிக் கையினால் நடந்தது போதும்!
அறிவ றிந்த ஆள்வினை ஒம்புமின்!
நலமிலாக் கலியுகத் தோடு பொருதுமின் !
தொழில்களும் கலைகளும் செழிக்கச் செய்திடும்
கிருத யுகத்தினை விரைந்து கொணருமின்!
புதியதோர் உலகம் காண, நீர் எழுமின்!
கழனி யிற்களை எடுத்தல்நன் றென்பது