பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடிப்பு:
செல்வம் வருகுது எனக்கவி பாடிய
பழநி இளங்கம்பன் பாட்டினைக் கேட்டோம்!
வாழ்வோம் அவர்நெறி, வளமெலாம் எய்தியே!

கவிஞர் மா. வரதராசன் - அறிமுகம்


நந்தம் நாடு நனிபல சாத்திரம்
கண்டதோர் நாடு! ஆயினும் கணக்கிலாச்
சாத்திரம் ஆனதால் சழக்குக ளுக்கே
வித்தா யின;பல வேற்றுமை விளைத்தன!
“சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்”
என்றுநம் அப்ப ரடிகளும் ஏசினார்!
ஆயினும் என்ன? ஆண்டவ னுக்கே
புனிதம்சேர்க் கும்எனும் பொய்ச்சாத்தி ரங்களால்
சாதியை வளர்க்கும் சழக்கர்தம் வழக்குகள்
வளருதல் கூடா! மயக்கும்அச் சாத்திரம்
மன்பதை நோக்கி மாறிட வேண்டும்!
இவ்வா றெண்ணல் ஈரோட்டு நெறியல!
வள்ளலார் வகுத்த ஒள்ளிய நெறியே!
பழைய சாத்திரம் மீதுள பற்று
திருவா ரூரின் தேரைப் போன்றது!
திருவா ரூர்த்தேர் தெருவில் நகருதல்
எளிதன் றென்பது யாவரும் அறிந்ததே!
அத்திருத் தேர்வடம் அக்கறை யோடு
பிடித்திடப் பெரிய கூட்டம்இன் றில்லை!
பழைய சாத்திரப் பைத்தியத் தேரைப்
புதியதோர் உலகம் நோக்கி இழுத்துச்
சென்றிட, பழைமையைச் சிந்தையில் தேக்கி
அஞ்சி நின்றிடும் நந்தமக் கிங்கே