பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

97


புதியதோர் உலகம் படைத்திடத் துணையாய்
நிற்கும் அறிவியல் அற்புதம் காட்டி
ஆன்ற தொழில்நுட்பம் தேர்ந்து சிறந்திட
வரமிக வழங்கி மாத்தமிழ்க் கவிஞர்
வரத ராசன் வழிகாட்டு வாரே!

முடிப்பு:

வண்டமிழ்க் கவிஞர் வரத ராசன்
தந்தநற் கவியால் சாத்திர வளர்ச்சி
இதுவெனத் தெளிந்தோம்! இறும்பூ தெய்தினோம்!
நந்தம் நாடு நலம்பெற் றுயர்ந்திடத்
தேர்ந்த தொழில்நுட்பச் சிறப்பெலாம் காட்டினார்!
வையக மெல்லாம் செழித்துவா ழியவே!
புதிய பாரதச் சிற்பி நம்நேரு
விண்ணில் ஒளிரும் விண்மீன் கள்என
இருபத்தி ஏழு அறிவியல் ஆய்வு
மையம்கண் டார்இவை, சி.எஸ்.ஐ. ஆர்.என
அழைக்கப் படும்அவை வழங்கிடு கின்ற
தொழில்நுட்ப மெல்லாம் தேர்ந்துவாழ்ந் திடுவோம்!

கவிஞர் விசயலக்குமி நவநீத கிருட்டிணன் - அறிமுகம்


கற்றவர் நியாயம் காணுவர்! அவர்பால்
சூது மதிஇல் லாதபோது!
தொழில்,
நியாயத்தின் பார்வையில் எல்லை கடந்தது!
அத்தொழில் இன்று பொருளினைச் சேர்க்கும்
இயந்திரம் ஆனதால் நியாயம் என்பதைக்
காணவே யில்லை! சாத்திரம் சழக்குக்கு
ஆளா காதெனில் நியாயம் காட்டிடும்!
செல்வம் செய்திடும் நன்மை பலப்பல!