பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எனினும் செல்வம் நனிநியா யத்தையும்
மறைத்திடும் என்பதை மறைப்பதற் கில்லை!
பிறர்தம் பங்கைத் திருடும் மாந்தர்
செல்வம் சேர்ப்பதில் நியாயம் பார்த்திடக்
கூடா தென்றொரு நியாயம் கூறுவர்!
அநியாயம் எலாம் நியாயமாக் காட்டிடும்
பொய்ம்மை நிறைந்த இந்தப் புவியினில்
மகளிர் வாழ்க்கைக் காக நியாயம்
கேட்டிடு கின்ற பாட்டிசைக் கவிஞர்
விசய லக்குமி நவநீத கிருட்டிணன்
“நியாயம் தெரியுது” எனக்கவி நிகழ்த்தப்
போகிறார்! கிராமப் புறத்து மாந்தரின்
இதயம் தெரிந்தவர்; இதமும் அறிந்தவர்
இசையமு தக்குயில் விசய லக்குமி
கவிதையில் நியாயம் தெரிவதைக் கேட்போம்!

முடிப்பு:

கவிதைப் பொழிலில் வெற்றி முரசு
கொட்டிடும் விசய லக்குமி இசைத்த
“நியாயம் தெரியுது” எனும் கவி கேட்டோம்!
நியாயம் தெரிந்தது!
சூடு பிறந்தது சுரணையும் வந்தது!
ஆயினும் நியாயம் செய்யத் தெரியுமா?
சத்திய மாக அதுதெரி யாது!
தனிஉடை மையெனும் பிணியும் தகவிலா
அதிகா ரமும்இவ் அவனியில் மனிதனைச்
சைத்தா னுக்கே அடிமை யாக்கின!
இன்றோ, சைத்தான் வேதம்ஒ துகிறது!
அன்புடை யீரே! சிந்தை தெளிமின்!
புதுமையும் பொதுமையும் படைத்திடும் நூல்களைத்