பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



8. புதுச்சேரி பாவேந்தன் பாரதிதாசன்
கவிதா வேள்வி


புதுச்சேரி பாவேந்தன் பாரதிதாசன்

கவிதா வேள்வி 26.12.1989
வாழ்த்துக் கவிதை



புவிமண் டலத்தில் கவிதா மண்டலம்
பிரெஞ்சு மணங்கமழ் பெருமைசேர் புதுவை
மண்ணிலே தோற்றுவித் திட்டதேன்? எதனால்?
புதுவையி லேதான் புதுயுகக் கவிஞன்
பாரதி வாழ்ந்து விடுதலை முரசம்
பார திர்ந்திட ஆர்த்தனன்! மேலும்
பாரதி தனது கவிமர புக்கு, ஒரு
வாரிசை வரித்துக் கொண்டது, இம் மண்ணில்தான்!
புதுவையின் குயிலும் கூவும் கவிதையே!
சுதந்திரம், சமத்துவம், சகோத ர்த்துவம்
என்ற மூன்று மந்திர மொழிகளைத்
தந்த பிரான்சு தேசம் வாழ்க!
பாரதிக் கவிஞனின் கவிக்கொரு மிடுக்கினைக்
கொடுத்துப் புதுயுகப் புரட்சியைக் கண்ட
மானுடம் வாழ்க! வாழ்க, வாழ்கவே!
பாரதி, தேசியம் பாடி விடுதலை
வாங்கித் தந்தனன்! அவன்அடிச் சுவட்டில்
வந்த, பா வேந்தன் புரட்சிக் கவிதை
முரசம் ஆர்த்துச் சங்கம் முழங்கினன்
பாரதி, “வேதம் புதுமைசெய்” என்றான்
பாவேந்தன் புதிய வேதம் ஒதினான்!
அந்தப்பா வேந்தன் அடிச்சு வட்டினில்