பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

103


“புதியதோர் உலகம் செய்வோம்! - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!”
எல்லா ருக்கும் எல்லாம் என்ற
நியதியை உலக நீதி யாக்குவோம்!
பொதுவுடை மையே பூமண் டலத்தின்
பொதுவிதி யென்று கவிதை இசைப்போம்!
புரட்சிக் கனல்மணம் வீசிய மண்ணில்
கூடி யிருக்கும் கொழிதமிழ்க் கவிஞர் காள்!
கவிதாஞ் சலியா செய்யவந் தீர்கள்?
நமது கவிஞர்கள் இருவரும் உமது
அஞ்சலிக் கவிதையா எதிர்பார்த் திருந்தனர்?
அவர்தம் நெஞ்சு புரட்சிக்கொந் தளிப்பு!
பகுத்தறி வுச்சுடர் வீசிய தீக்கனல்!
போர்முர சார்த்த வீரக் கவிக்களம்!
எந்தமிழ்க் கவிஞர்காள்! எண்ணுமின்! எண்ணுமின்!
பாவேந் தனின் அடிச் சுவட்டினில் இங்கே
வேதம் புதுமை விரைந்துசெய் யுங்கள்!
புதிய வேதம் செயப்புறப் படுங்கள்!
சாதி களைச்சுட் டெரித்துப் பொசுக்குக!
மருட்டு கின்ற மதத்தலை வர்களை
மக்கள்மன் றத்தின் தனிமைப் படுத்துக!
முழுச்சு தந்திர மூச்சுக் காற்றினை
மக்கள் சுவாசிக்கு மாறுசெய் திடுக!
இந்திய அரசினை முதலா ளிகளின்
கைகளி லிருந்து கடிதினில் பிடுங்கி
உழைப்பவர் கைகளில் ஒப்படைத் திடுக!
பழைய பைத்தியம் தொலைந்திடச் செய்க!
கொடியவன் முறைக்குச் சாப்பறை கொட்டுக!
“ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்