பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருக்கோயில் பேணல், சிவநெறி வளர்த்தல்
வேதாந்தக் கல்வி வழங்குதல், மேலும்
இன்னபே ரறங்கள் நன்னர் இயற்றிப்
புகழ்நலம் சிறந்து பொலிந்து விளங்கும்
ஆதீனம் கோவிலூர் ஆதீன மாகும்!
இந்த ஆதீனத்தில் இற்றைக்கு அமர்ந்தருள்
காசி விசுவ நாத தேசிகர்
ஆற்றல் மிக்க அன்பின் உருவினர்!
சீர்சால் இதயமும் சிரித்த முகமும்
அரவ ணைத்திடும் அருமையும் பண்பும்
இசையுடன் கூடிய இனியசொற் பொழிவும்
அணியெனக் கொண்டவர்; அருளில்மேம் பட்டவர்!
அற்றைநாள் ஞான சம்பந்த ருக்கு
அப்பர் எனநாவுக் கரசர் அமைந்தார்!
ஐய, நீ,
இற்றைநாள் நமக்கு வாய்த்தஅப் பர்எனத்
திகழுகின் றனை! நின் அன்பில் திளைத்திடும்
பேறுநாம் பெற்ற பெரும்பே றாகும்!
கன்னித் தமிழ்மொழி கவிதை மொழியாம்!
கவிதை நலத்தில் கனிந்தநல் வாழ்வே
தமிழர்தம் வாழ்வு! அது தனிப்பெரு வாழ்வு!
கோவிலூர் ஆதீனக் குருவாய்த் திகழ்ந்திடும்
அருந்தவத்து அடிகள் நின்றன வாழ்வு
வண்டமிழ்க் கவிதை வாழ்வா குகவே!
காசினி யிற்சிலர் காசிக்குச் சென்றனர்
ஆயினும் அவர்கள் நாயன்மார் போலே
காலால் நடந்துகாசிசென் றார்அல்லர்
நாயன்மார் போலே நம்பனை நினைந்து
பாரத நாட்டைப் பாதத்தால் அளந்து