பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


2. லெனின் புகழ் வாழ்க!

        புதியதோர் உலகம் காணும் குறிக்கோளுடன்
        மாமுனிவர் மார்க்சின் அறிவியல் நூலான
        மூலதனம் என்ற முதல் நூலுக்கு
        விளக்கம் எழுதியதோ டன்றி,
        மாமுனிவர் மார்க்சின் சிந்தனையாகிய
        பொதுவுடைமைச் சமுதாய அமைப்புக்கு
        அயராது உழைத்துச் செயலுருவம் தந்த,
        மாமேதை லெனின் புகழ் வாழியவே!
        கலியுகத்தைக் கொன்று கிரேதாயுகத்தைக் கொணர்ந்த
        யுகப் புரட்சித் தலைவன்,
        எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வையகம் படைத்த
        உத்தமத் தலைவன் லெனின் புகழ் வாழ்க!
        "மாநிலம் பயனுற மனிதகுலம் வளரக்
        கூட்டுறவே வழி வேறுவழி இல்லை” என்று
        மக்களைக் கூட்டுறவில் நம்பிக்கை கொள்ளச் செய்த
        மக்கள் தலைவன் லெனின்புகழ் வாழியவே!
        உலகத்துக்கு ஒர் புதுமையாய் சோவியத்தை உருவாக்கிய
        உழைப்பாளர் தலைவன் லெனின்புகழ் வாழியவே!
        போரற்ற சமாதான உலகம் காணத் துடித்த
        அன்புத்தலைவன் லெனின் புகழ் வாழிய, வாழியவே!