பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

117


        நெறியினில் நின்றே நிலவும் சீர்மையால்
        பெருஞ்சோ றளிக்கும் பெருநெறி யதனை
        விரும்பி வேட்டனை! நின்கொற் றத்துப்
        பசித்த வயிற்றினைக் காண்கிலம்! பைந்தமிழ்
        பாங்குடன் ஓங்கிப் பாரெலாம் மணக்க
        இமயப் பெருங்கல் தமிழ்வரை யாக
        ஏற்றிடச் செய்யும் ஏந்தல்நின்
        வலனேர்பு கொற்றம் வாழிய இனிதே"

(2)

திணை: பாடாண் திணை துறை: வாழ்த்தியல்

        மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகமென்
        றந்நாள் புலமைச் சான்றோன் அறைந்தான்
        மலர்தலை உலகிற் கரசே உயிராம்
        அரசினுக் குயிரோ அனைத்துயிர் நீதி
        நீதி நெறியில் நின்றினி தொழுகிய
        பெரும்பெயர்க் கொற்றம் அருந்தமிழ்க் கொற்றம்
        ஆவிற் காய்த்தம் அருமகன் கொன்றும்
        இணையிலா நீதிக் கின்னுயிர் ஈந்தும்
        முந்தை முன்னோர் முறைநெறி போற்றினர்
        செந்தமிழ்க் கலைஞ, நந்தம் மக்கள்
        நின்னருங் கொற்றம் இந்நிலம் காணுமுன்
        அஞ்சல்விண் ணப்பம் அனுப்பியே கண்டனர்
        ஆயினும் அரசின் மறுமொழி அடைந்திலர்
        கோத்துக் கட்டிய கோப்புகள் குவிந்தன,
        குறைகளும் தவிர்ந்தில, குறைதெரி வித்தே
        எழுதிய மக்கள் ஏதும் பெற்றிலர்
        ஞாயிறு தோய் நெடு மாளிகை முன்றிலில்
        முழங்கும் மணியொலி கேட்டு முறைமை
        வழங்கிய மனுநீதிச் சோழன்நின் குலத்து