பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


        இனத்துப் புகழாம்! இவர்அருள் நெறியை
        நும்முயி ரனைய செம்மல் அண்ணா
        ஒருகுல நெறியென் றுவந்து போற்றினர்
        அருந்தமிழ்க் கீசர் அப்ப ரடிகளின்
        புகழினைப் பேணப் புவியினை யாளும்
        நின்னிடம் விழைவது நிகழ்த்துவ்ம் ஒன்றே!
        சிந்தை மகிழ நந்தம் அப்பர்
        பெயரில் உயர்தமிழ்ப் பல்கலைக் கழகம்
        உய்த்துணர் மெய்ப்பொரு ளுடன்பயிற் றுவிக்கப்
        பாங்கொடு காணப் பரிசில்
        நல்கிப் பயனெலாம் நனிமிக வுறுகவே!

(5)

திணை: பொதுவியல் துறை: இயன் மொழி

        உலக முவப்ப வலனேர்பு திரிதரு
        நின்றன் கொற்றம் நின்று வாழிய
        மேவு வாழ்க்கை விருப்புறு உணர்வு
        வேட்டன வெல்லாம் வழங்குவே ளாண்மை
        நுந்தம் குடியின் மரபென அறிந்தோம்.
        அதனால்
        நாமும் நின்பால் நயந்து வேட்டனம்
        உன்றன் ஆவி யென்றே விளங்கும்
        அறிஞர்அண் ணாவின் ஆருயிர் நிகர்த்த
        அன்னை மொழியாம் கன்னல் தமிழ்க்கோர்
        துறைதொறும் துறைதொறும் நிறைவளம் சேர்க்கும்
        பல்கலைக் கழகம் காண வேட்டனம்.
        யாம்தமி ழகத்திரு மடங்களின் பேரவை
        இயக்கும் தொண்டன் என்றொரு முறையில்
        வேட்டனம் உன்றன் தோழமை யுணர்வு
        எண்ணிய முடிக்கும் என்னும் அசைவிலா