பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

129


        திருநாளைப் போவாரைத் திசைதொழு தேத்தி
        ‘ஐயரே என்றழைத் தமைவுடன் தாழ்ந்து
        வலம்வந்து வாழ்த்தி ஆடல்வல் லானின்
        அரங்கினுக் கழைத்துச் சென்றன ரன்றே
        சாதி முறைகள் சருகாய்ப் போயின.!
        தீண்டா மையும் சிதைந்து தொலைந்தது!
        மறதி களையே மரபெனப் போற்றி
        வரும்நம் தமிழின மக்களுக் கெல்லாம்
        நன்றினைக் காட்டி நாளும்படிப் பிக்கும்
        பண்பார் பத்ம நாபச் செம்மால்!
        நன்னெறிக் காவல! நாவல! பாவல!
        அறநெறி சார்ந்த ஆட்சி யாள!
        நீள நினைந்து திருநாளைப் போவார்க்கு
        ஒருமணி மண்டபம் உவந்து கண்டனை!
        வாழ்கநின் கொற்றம்! மனித நேயம்!
        தண்டமிழ் நிலம்நின் தாளாண்மை எண்ணி
        எண்ணிப் போற்றும் எண்ணிலா ஆண்டுகள்!
        மேலாதனுரர்ப் பணியினை மேலும்
        சிறக்கச் செய்கென எம்மைப் பணித்தனை!
        பிழைக்கா தியற்றுவ தெம்பெருங் கடனே!
        நீ கருது பணியினை நின்று
        முடித்தல் எந்தலைக் கடனாம் முயல்வமே!