பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


11. ’துரை கலியமூர்த்தி

        இந்தப் புவியில் எதுசிறந் ததெனில்
        ஈடில்மா னுடமே சிறந்தது! இன்றோ
        பணம்பெரி தாகி மனித மதிப்பினைப்
        பாழ்செய் நோயே பரவு கின்றது!
        மானு டத்தை மதித்தலும் அந்த
        மானுடத் திற்கு மாறா அன்பு
        செய்தலும் சீரிய அறமெனத் தேறித்
        தெளிந்தனன் சிறந்த முறைமன் றத்தில்
        நீதி வழங்கும்நெறிசால் உயர்துரை
        கலிய மூர்த்தி யெனும் ஒரு சான்றோன்!
        பிறர்தம் பங்கைத் திருடிப் பிழைக்கும்
        எத்தரால், குறிஞ்சி நிலத்தினில் இருந்த
        குறவர்தம் உரிமை பறிபோ யிற்று!
        தொல்லை தந்து முல்லை நிலத்திற்குத்
        துரத்தப் பட்டனர் தொல்குடிக் குறவர்!
        முல்லை நிலத்திலும் நிலம்கிடைக் காமல்
        புறங்கா டதனிற் புகுந்து வாழ்ந்தனர்;
        ஆங்கே அலையும் நரிக ளோடு
        கூட்டுற வாகிக் கூடி வாழ்ந்ததால்
        நரிக்குற வர்எனும் நாமம் பெற்றனர்!
        புறங்கா டதனினும் உறிஞ்சியே வாழ்ந்த
        உலுத்தர்கள் தந்த ஒயாத் தொல்லையால்
        காடு மிழந்தனர்; நாடோடி யாயினர்
        ஊர்சுற்றி வாழ்தல் பழக்கமா யிற்று!
        ஓருர் இல்லை. தலைசாய்த் துறங்க
        ஒருவீ டில்லை; ஒருதொழி வில்லை!
        இந்த இழிநிலை கண்டுளம் நொந்த


* 1988இல் சிவகங்கை நீதிபதி.