பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


14. பரமகுரு வாழ்க!

        பூமலி உலகில் பிறந்தோர் பலர்!
        வாழ்ந்த சுவடே இல்லாமல், காணாமல் போனவர்கள் பலர்;
        வாழ்ந்த போதே பயனுற வாழ்ந்தவர் சிலர்;
        இச்சிலருக்கு ஏன் வயதுகள் வளர வேண்டும்.
        இம்மாநிலம் பயனுற வாழ்வோர்
        என்றும் வாழ்ந்தால் என்ன, கூற்று வனுக்கு இழப்பா?
        நல்லோர் பலரும் இன்றில்லாததால்
        முற்றிய கதிர்மணிகளைக் காணோம்!
        பதர்களே எங்கும்!
        இவருள்ளும் ஒருசிலர் உண்டு!
        அள்ளி எடுத்தல் இயலாது; பொறுக்கி எடுத்தல் வேண்டும்!
        அங்ஙனம் பொறுக்கி எடுத்த மனிதருக்கும்
        வயது வளர்கிறது என்பது ஏன்?
        பற்றிலர் பாங்குடன் பழகுவர்;
        கருமமே கண்ணாக உடையர்
        நோயினால் உடல்வருந்தியும் விடுமுறை விண்ணப்பம்
எழுதியறியார்;
        எப்படி எழுதினும் புரிந்து கொள்வார்!
        இவர்போல் படித்தார் யார்?
        (அன்பும்) பணிவும் அணியெனக் கொண்டவர்;
        நமது இலக்கியப்பணி முதிர, நூல்கள் பல வர
        உதவிய பாங்குக்குக் கைம்மாறு ஏது?
        ஐய, பரமகுருவே! பல்லாண்டுகள் வாழ்க!
        நோயின்றி வாழ்க!
        இன்புறு நலன்கள் அனைத்தும் பெற்று வாழ்க!
        விரைவில் நூறாவது புத்தகம் வர உற்றுழி உதவுக!
        நின்உதவிக்குக் கைம்மாறும் கடப்பாடும் செய்ய இயலுமா?
        பரமகுருவே! பல்லாண்டு வாழ்க், வாழ்க!