பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

137


17. தருமபுர ஞானபுரீசுவரர் கோயில்
திருக்குட நீராட்டு விழா மலர் வாழ்த்து

        தரணியை யெல்லாம் தன்பால் ஈர்க்கும்
        கங்கையிற் புனிதமாம் காவிரிக் கரையில்
        ஆருயிர்க் குற்ற பகையெலாம் கடிந்து
        தண்ணருள் பொழியும் தரும புரத்தினில்
        மன்னுயிர்க்கு ஊன சம்பந்தம் நீக்கி
        உய்திதந் தருளும் ஒப்பிலா ஞான
        சம்பந்த தேசிக! தருமையும் கமலையும்
        விரிதமிழ்க் கூடலும் திருநக ராக
        அரசு வீற்றிருந் தருளும் ஞான
        சம்பந்த தேசிக! நின்திரு வுள்ளத்திற்கு
        இசைந்த தொன்றினை இயம்புவன் கேண்மோ!
        கயிலையின் நீங்கித் தரும புரத்தில்
        உலகுயிர் அனைத்தையும் வினைப்பகை சுடாமல்
        ஆட்கொளும் ஐய! ஞானத் தலைவ!
        என்பால்நின் கருணை மாறி விழுந்ததேன்?
        ஞாலத் துயர்தமிழ் அறிவு நல்கினை
        வேதாந்தத் தெளிவாம் சித்தாந்த அறிவுதந்து
        சிந்தையும் தெளிவும் தெளிவு சிவமுமாய்
        விளங்கு பெற்றிமை உணர்த்தி யருளினை!
        மூலையில் கிடந்தேனை முற்றத்தில் விட்டனை!
        நின்னருள் வழியில் நிற்கமாட்டா தேற்குத்
        தவிசுமிட் டருளினை ஆயினும் என்ன?
        நின்றும் கிடந்தும் எழுந்தும் நடந்தும்
        நின்நாமம் ஏத்தி வாழ்ந்திடும் பேறு
        பெற்றே னிலேன்; நின் பரிகலம் மாந்தி
        மகிழ்வுறும் பேறு வாய்த்திலேன்; ஞான

கு.XIV.10.