பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்கலும்

143


        "பிறப்பொக் கும்எல் வாஉயிர்க்கும்” எனும்,
        வள்ளுவம் பிறந்த வரலாற்றுச் சிறப்புடைத்
        தொன்மைத் தமிழகத்(து) எண்ணத் தொலையாச்
        சாதிகள் இறைவன் சந்நிதி வரையில்
        கொட்டம் அடித்துக் கூத்தாடு கின்றன!
        விழுப்புர மும்வெண் மணியும் மீனாட்சி
        புரமும் இராம நாத புரமும்
        தமிழர் வரலாற்றின் கறைகளே யன்றோ?
        "ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிரு”என்றும்
        "எந்நாட் டவர்க்கும் இறைவன்" என்றும்
        சமயப் பொதுநெறி கண்டஇந் நாட்டில்
        மண்டைக் காடுமுதல் மணப்பா றைவரை
        சமயச் சண்டையால் சாரமே இல்லாச்
        சமயம் காணும் அவலம் வந்தது!
        இல்லா ரும்இலை உடையா ரும்இலை
        எனும்உயர் மானுடன் கம்பனின் வாக்கு
        வலுவினை இழந்து வறுமை மிஞ்சி
        நிலநடுக் கோட்டொடு போட்டி போட்டிடும்
        வறுமைக் கோடு வந்த நாள்இது!
        "சக்தி யேசிவம்" என்பீர்! வள்ளுவன்
        "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்றான்.
        ஆயினும் என்ன? அகத்தி னில்எழும்
        துன்பத் தீயினில் நாழிகை தோறும்
        செத்திடு வோரும் புறத்துமுண் டெரியும்
        தீயினில் வீழ்ந்து செத்திடு வோரும்
        எத்தனை பெண்கள்! எண்ணிப் பார்மின்!
        கருத்துக் களின்வழி கட்சிகள்! கட்சிகள்
        அரசியல், சமூக அருமைநா கரிகப்
        பண்ணைகள் என்ற தத்துவம் கெட்டு
        எரிவி னாலே எதிரிக ளாகி