பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


23. தமிழ்ப் பொங்கல் பொங்குக

பொங்கலோ, பொங்கல்! பொங்குக, பொங்கல்!
செந்நெல் அரிசியும் செங்கரும்புச் சாறும்
சுவைமிகு நெய்யும் அளவொடு கலந்து
ஆயது இனிய சர்க்கரைப் பொங்கல்!
ஒவ்வோ ராண்டும்தான் உண்கிறோம்! சர்க்கரைப்
பொங்கல் மட்டுமா பொங்கல் திருநாள்!
தமிழர் திருநாள்? சற்றுச் சிந்திப்போம்!
பொங்கல் என்றது.ஏன்? இங்குள்ள தமிழர்
யாவரும் ஒன்று படவேண்டும் என்பதே!
நாளும் நாளும் தமிழர்கள் தம்முள்
அந்நியப் பட்டுக் கொண்டுசெல் கின்றனர்
தமிழினம் ஓரினம் தமிழ்க்குடி ஒருகுடி
என்றநல் லுணர்வை இதயத்தில் பதிப்போம்!
சங்க காலத்துச் சான்றோர் கோவூர்கிழார்
"ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே
இருவர் வேறல் இயற்கையும் அன்றே"
என்ற இசைமொழி வாழ்வாகும் நாளே
தமிழர்க்கு உண்மையில் பொங்கல் நாளாகும்
தமிழ், பகை பலகண்டு வளர்ந்த தனிமொழி
அன்று ஆரியத்தை வென்றது நம்தமிழ்
இந்தியைக் களத்தில் கண்டுவென் றதும்தமிழ்!
இன்றோ ஆங்கிலத் தின்நெருக் கடியால்
தாய்மொழி தமிழ்தன் தகுதி யிழந்து
வருங்கொடு மையினால் பெருங்கேடு வந்தது!
இல்லங்கள் தோறும் குழலும்யா மும்என
இசைத்தது தமிழ் அத் தமிழ்பேசும் மழலைகள்
"அம்மா"வை மறந்து "மம்மி" என்றும்