பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்கலும்

151


அண்ணல் வருந்திய வருத்தம்ஆ ரறிவார்?
அண்ணல் மட்டும் அறியலாம். அவனோ(டு)
ஆரு ரன்பால் ஆர்ந்த வேட்கையில்
மாதே வனும்இம் மண்ணிலே நடந்து
மீண்டும் அவனை மீட்டுச் சென்றனன்!
அந்தஆ ருரன் மீண்டும்.அக் காதல்
வழிப்பட் டிருப்பான் போலும்! எதையும்
காதலிக் காமல் தன்னையே காதலித்(து)
இன்புறும் இனிய தோழனை விரும்பி
கயிலா யத்துறை நாதன் கடிதினில்
நாடி நின்னை நயந்துபெற் றனனோ?
தகைசால் சிவத்திடம் தன்னலம் இருந்ததே,
அவன்நன் றாகவாழ்ந்துபோ கட்டும்!
நின்னுடைப் பேணலில் நிமலன் மகிழ
மண்ணகம் விட்டுனை மறைந்தெ டுத்தனன்.
யானென் செய்வல்? யானென் செய்வல்?
நெஞ்சின் தூய்மை நின்முகம் காட்டக்
குழைத்த அன்பினை நின்சொற் கூட்ட
அணைத்த அணைப்பின் இதத்தினை இகழ்ந்தேன்!
எம்போ லியரும் இம்மண் ணுக்கிரை
யாகி விடாமல் அழியா மாண்பு
படைத்துத் தந்தநின் படைப்புத் தொழிலையும்
ஊனுக் குணவும் உயிர்க்கு ஞானமும்
உவந்தளித் திடும் நின் காத்தல் தொழிலையும்
நின்றன் சிரிப்பில் எந்தம் பண்டைக்
கொடுவினைக் காரியம் மறை(த்)திடும் தொழிலையும்
ஞானத் தழுவலால் எம்மூல மலத்தை
அவித்தழித் தமைந்த அழித்தல் தொழிலையும்
இமயம் சார்கருங் காக்கையும் எழிலார்
பொன்மய மாகப் பொலிவது போல