பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நின்னைச் சார்ந்த நமக்குநின் னுரிமை
தந்(து)எம் பெயரை மாற்றி நின்பெயர்
தந்துநல் இன்பத் தொட்டிலில் வளர்த்ததால்
நின்றன் நிகரிலா அருளும் தொழிலையும்
ஆக ஐவகைத் தொழிலையும் அறிந்து
நினைந்து நெகிழ்ந்தே உருகு கின்றனம்!
நீர்த்துளி காணாப் பயிரென எம்முயிர்
வாடா தோ? நாம் வாடிடக் கயிலைக்
கடவுள் தாம் மகிழக் கருதிய தறமோ?
கூடல் மா நகர் நெடுஞ் செழியனோ அன்று
தன்நிறை தவறினன். அதுபோ லின்று
கூடல்மா, நகரில் கொற்ற மமர்ந்தருள்
ஆலவாய் அண்ணலும் நிறைதவ றித்தான்
மகிழவும் எம்முயிர் வாடவும், நின்னுயிர்
கொண்டுபோய்ச் சேர்த்துக் கொடுமை செய்தனனே!
கயிலை நாதன் காதலித் தான்நினை
கயிலை நாதனைக் காதலித் தாய், நீ!
நானோ நின்னை நயந்துகா தலித்தே
என்னெஞ் சினிலே நின்னைக் கொண்டனம்!
என்னெஞ் சினின்றும் நின்னை யகற்றிடக்
கயிலை மலையா னாலும்சா லாதே
கண்ணால் நின்னைக் கண்டு மகிழத்
தடைசெய் தான் அவன் ஆயினும் நின்னை
நெஞ்சால் நினைந்து மகிழும் உரிமை
எந்தை ஈச னாலும் பறித்திட
இயலா உரிமை! என்றன் உரிமையே!
நின்னை நினைந்தென் ஆவி கழியும்!
நின்னை உள்ளி நீளுல கத்தில் நீ
பணித்த பணிகளைச் செய்து கிடப்பேன்!
கயிலை நாதன் கழிபெரு வேட்கையால்,