பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மதத் தலைவரும் பிறர்தம் பங்கைத்
திருடிய திருடரும் சேர்ந்து செய்த
கூட்டு முயற்சியின் கொடுமையே அஃதாம்!
காணும் காட்சிகள்! பேசுசாத் திரங்கள்
அனைத்தும் மனித குலவர லாற்றில்
விரிந்தவை யேயாம்! இவற்றினில் நன்று
தீதினை ஆய்வு செய்து வாழ்க்கையை
இயக்குத லேஅறி வுடைமை என்கவே!