பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

173


11. மார்க்சியம்

வைய கத்தினில் வாழ்வாங்கு வாழ்ந்து
உய்தற் குரிமை யுடைய உயிரினம்
வளமார் அறிவுப் புனல்நிறைந் தினிது
வாழ்ந்திட வேண்டும்;
ஆன்மா விற்கு அறிவுப் புனவினை
வழங்கு வாரி யங்களே பொறிகள்
கண், காட் சியில்களித் தல்குறி யன்று;
கண்டது கற்கப் பண்டித னாவான்
என்ற மூதுரை நன்கு தேறுக
புவியீர்ப் புத்தத் துவத்தினைக் கண்ட
அறிவியல் மேதை ஐசக் நியூட்டன்
ஆய்வுக் கூடத் திலாஅது கண்டார்?
ஓங்கி உயர்ந்த மரத்தினிற் பழுத்த
பழம்நிலம் நோக்கி விழுந்திடப் பார்த்த
போது கண்டதே புவியீர்ப் பாற்றல்!
காண்க! உற்றுக் காண்க! காண்கவே!
இயற்கையைத் தேறுக!
மாளிகை மருங்கே குடிசைகள் காண்க!
செல்வப் புனலோ
பள்ளம் நோக்கிப் பாய்வ தில்லை
மேடு நோக்கியே மேவிப்பாய்கிறது.
இந்த விந்தையை ஆய்ந்து கண்டதே
மார்க்சுமா முனிவர் கண்ட மார்க்சியம்,
மார்க்சி யம்ஒர் அறிவுக் கருவி
அந்த அறிவுக் கருவிஏந் துகவே!