பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


12. செவியைத் தருக!

மானு டத்தின் வளர்ச்சிக் கென்றும்
ஐய மிலாத அருந்துணை செவிகளே!
செவியறி வுறு உவாய்ச் செப்பிய தோர்க!
உடலுறு பொறிகளில் செவியெனும் உறுப்பே
மறுதொழில் செய்யாது ஒரேதொழில் செய்யும்!
உடன்பா டானவும் கேட்கும் நேரெதிர்
இயல்பின தாயினும் கேட்கும் இயல்பாய்
அமைந்த செவிகளின் அரியபாங் கறிந்து
பயன்கொள் வார்வாழ் வின்பயன் கொள்வார்!
செவிநுகர் கனியினும் அமுதமும் ஏது?
கூனிபோன் றார்க்குச் செவியினைக் கொடுத்துத்
தாழ்ந்து விடாதீர்! தாழ்ந்து விடாதீர்
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்சான் றோர்க்குச்
செவியினைத் தந்து புவியினில் வாழ்வீர்!
வாழ்வீர் பெருவாழ்வு வாழ்வீர்! வாழ்விரே!