பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

175


13. உடலால் உறுபயன்

உயிர்கள் உய்யும் நெறிக்குறு துணையாய்
நுண்கரு விகளுடன் அமைந்தது உடம்பே!
அவ்வுடம் பழியும் இயல்புடைத் தாயினும்
மெய்யெனக் கூறினர் மெய்ப்பொரு ஞணர்ந்தோர்
மெய்ப்பொருள் தேறுத லுக்கொரு கருவியாய்
அமைந்த மெய்யினை அடைந்த மானுடம்
உற்றறி வனஅறிந் துணர்வன உணர்ந்து
உறுபயன் அளிப்பன தேறுதல் அறிவாம்!
ஓடியும் நடந்தும் உறுதொழில் செய்தும்
பொருளினைச் செய்து பலர்க்குப் பொருளென
விளங்குதல் அறிவாம் நலந்தரு கோயில்
வலம்வந் தும்இறை வழிபா டியற்றியும்
உடலினால் உறுபயன் காணல்
அறிவுக் கறிவென அறிதல்நங் கடனே!