பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

181


19. ஒட்டை விழுந்த ஒடம்!

நீலத் திரைக்கடல் அலைகளைப் போல
நாளும் பற்பல அலைகளால் உந்தப்
பெறும்நினை வில்குழம் பிடும்நீல மேக!
வையகம் வாழ்ந்து வெற்றிகள் பெற்றோர்
நம்முன் னோடிகள் அவர்தம் நினைவினைப்
போற்றுதல் சிறப்புடை வாழ்வின் மரபாம்!
பேருல கத்திற் பிறந்தோ ரெல்லாம்
ஆற்றலும் ஆளுமை யும்உடை யோராய்
ஆகி விடுவ தில்லை! அதாஅன்று,
அன்பொடு கூடி அருந்துணை யாகி
அர்ப்பணிப் புணர்வுடன் கடமையை ஆற்றிப்
பழகிய உறவினைப் பாது காத்திடும்
இயல்பின ராதலும் இல்லைஇஃ தறிக!
வல்லாங்கு வாழ்தலும் வாழ்வாங்கு வாழ்தலும்
வேறு வேறு திறத்தன வாகும்!
உற்ற ஆட்சி நலனும் அமைவுற
உயர்வாய் அமைந்த உறவுகள் பேணிக்
காத்திட வேண்டின் ஒட்டியும் ஒட்டாமலும்
உறவாடும் உறவு பயன்த ராது.
நாளும் நொந்து நோகின் றவர்களும்
நமக்கேன் வம்பு நடந்த வரை, சரி
என்ற எண்ணப் போக்குடை யவர்களும்
ஓட்டை விழுந்த ஒடம்போன் றவர்கள்!
எடுத்த காரியம் எதிலும் ஆர்வம்,
உணர்வொடு கூடிய உந்து சக்தி,
பொருந்தா ரிடமும் பொருந்தி இயக்கும்
புரையிலாப் பண்பு, குற்றம் பொறுத்துத்