பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

183


20. யாரொடும் பகை கொள்ளற்க!

கவிதை உலகத் தின்முடி சூடா
மன்னனாய் விளங்கும் மகாகவி கம்பன்
"யாரொ டும்பகை கொள்ளலன் என்றபின்
போரொ டுங்கும் புகழ்ஒடுங் கா" தென்றான்!
பகை - நல் அன்பினை அழிக்கும் நஞ்சு!
பகை - உற வதனைக் கெடுக்கும்புல் லுருவி!
பகை - ஒரு தொடர்நிலைத் தீமைஎன் றறிக!
பகைமை கொண்ட பாழ்நெஞ் சுடையோர்
யாதொரு நன்மையும் நாடார்! பகைவழிப்
பெற்றிடும் வெற்றியும் வெற்றிக ளல்ல!
பகைப்பு லத்தில் வெற்றியும் தோல்வியும்
சுழன்று சுழன்று வருதலே இயற்கை!
பகைவன் தனையும் பாரிக்கும் அன்பால்
விழுப்புக ழார்ந்த வெற்றியும் பெறலாம்!
பகையெனப் படுவது போருக்கு ஊற்று!
யாரொ டும்பகை கொள்ளாது வாழ்வீர்!
போரொ டுங்கும் புகழ் ஒடுங் காது!
அமைதிப் பூங்கா வாகும்.இவ் வுலகமே!